YouTube, Blogger, Admob, WordPress இதிலிருந்து Google AdSense இல் சம்பாதிக்க படும் Earnings உங்களுடைய வங்கி கணக்கிற்கு வருவதற்கு நமக்கு views, Subscribers and earnings எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே போன்று கூகுள் ஆட்சென்ஸ் இல் வெரிஃபிகேஷன் செய்வது மிகவும் அவசியமாகும். Pin Verification and Identity Verification இல் நீங்கள் செய்யும் தவறுகள் பற்றி தான் தெளிவாக காண போகிறோம். வெரிஃபிகேஷன் செய்வதற்கு கூகுள் ஆட்சென்ஸ் இல் மூன்று வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்படும். அதை தவற விட்டால் இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படும் ஆனால் கடினமாக இருக்கும். வருமுன் காப்பதே என்ற தத்துவத்தின் அடிப்படையில் வெரிபிகேஷன் செய்வதற்கு முன்பு இதை தெரிந்து கொண்டு வெரிபிகேஷன் செய்ய வேண்டும். மிகவும் அவசியம் உள்ள பயனுள்ள தகவல் ஆகும். Google AdSense இல் என்ன தவறுகள் செய்கிறோம் என்று தனித்தனியாக தெளிவாக காணலாம்.
Google AdSense Identity Verification Mistake
உதாரணமாக
Pancard எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் முதல் பெயர் எப்படி இருக்கிறதோ அதை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே payment address details இல் கொடுக்க வேண்டும். உங்கள் பெயர், உங்கள் பெயர் பக்கத்தில் அப்பாவின் முதல் எழுத்து, உங்கள் பெயர் மற்றும் தந்தையின் பெயர் என எப்படி இருக்கிறதோ அதை மாற்றமில்லாமல் பயன்படுத்த வேண்டும். சாதாரணமாக பயன்படுத்தப்படும் பெயரை கொடுக்கக் கூடாது. கவர்மெண்ட் டாக்குமெண்டில் உள்ள பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் அப்லோடு செய்யப்படும் புகைப்படும் ஸ்கேன் செய்து தான் செய்ய வேண்டும் என்று அவசியமே கிடையாது. உங்கள் தொலைபேசியில் தெளிவாக எடுத்தாலே போதும். இதனுடைய சைஸ் 2 எம்பி க்குள் இருக்க வேண்டும். jpg format. அப்லோட் செய்யப்பட்ட ஐந்து நிமிடத்தில் இருந்து 24 மணிநேரத்திற்குள் கூகுள் அட்சென்ஸ் இலிருந்து மின்னஞ்சல் அனுப்பப்படும்.
Pin and Address Verification Mistake
Identity Verification முடித்தபின்பு முகவரி வெரிஃபிகேஷன் தான் செய்ய வேண்டும். அட்ரஸ் வெரிபிகேஷன் எதற்காக என்றால் நீங்கள் கொடுத்த அட்ரஸை நீங்கள் இருக்கிறீர்களா என்பதனை சரி பார்க்க மட்டுமே. அதற்காக உங்கள் முகவரிக்கு ஒரு கடிதம் அனுப்பி அதில் 6 எண் கொடுக்கப்பட்டு கூகுள் ஆட்சென்ஸ் சமர்ப்பிக்கவேண்டும். இதில் பெரும்பாலும் பலருக்கும் உள்ள சந்தேகம் என்னவென்றால் கவர்மெண்ட் டாகுமெண்ட்டில் உள்ள முகவரியை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் இதேபோன்று யூடிபில் ஓ இல்லை உங்களுக்கு தெரிந்தவர்களோ கூறியிருந்தால் அதை நம்ப வேண்டாம். உதாரணமாக pancard முகவரியை இருக்காது. அப்போது எந்த முகவரியை நீங்கள் கொடுப்பீர்கள். தற்போது நீங்கள் வசித்து வரும் இடத்தின் முகவரியை கொடுக்க வேண்டும். காரணம் கடிதம் வருவதற்கான முகவரியை மட்டுமே கொடுக்க வேண்டும். தவறான முகவரியை கொடுக்க வேண்டாம். உங்களுடைய பிறந்த இடம் வேற, நான் தங்குமிடம் வேற என்றால் நீங்கள் தங்கும் இடத்தின் முகவரியை கொடுக்கலாம். 15 இறந்து 30 நாட்களுக்குள் கூகுள் அட்சன்ஸ் இல் இருந்து கடிதம் வரும். அதற்குப் பின்பு நமக்கு எந்த ஒரு வேலையும் இருக்காது. Pin Verification இல் முகவரி கொடுப்பதில் மட்டுமே தவறு ஏற்படும். ஆகையால் நீங்கள் வசித்து வரும் முகவரி மட்டுமே கொடுங்கள். கீழே உள்ள வீடியோவில் தெளிவாக காணலாம்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்து பயனுள்ள தகவலாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும்.