ஒரு கிராமத்தில் செல்வி என்ற ஒரு பெண் வாழ்ந்து கொண்டிருந்தாள். அந்த கிராமத்தில் அதிகமான மூடநம்பிக்கைகள் காணப்பட்டது. அதுவும் அக்கிராமத்தில் அதிகமான கட்டுக்கதைகளும் பெரியவர்களால் சொல்லப்பட்டது. செல்வி என்னும் பெண் தன் சிறுவயது தொடங்கி வாலிப வயது வரையிலும் இந்தக் கட்டுக் கதைகளை கேட்டு மூட நம்பிக்கையிலும் பயத்திலும் வாழ்ந்து வந்தனர்.
ஒருநாள் அக்கிராமத்தில் பாழடைந்த ஒரு கிணறு ஒன்று இருக்கும். அந்த கிணற்றடியில் யார் சென்றாலும் அங்கே இருந்து விடுவார்கள் என்று அங்குள்ள பெரியவர்களாலும் கிராமத்து மக்களும் சொல்லப்படுவது அதிகம். இதை கேட்ட கேள்வி மிகவும் பயம் அடைந்தால் அந்த பாழடைந்த கிணறு பக்கத்தில் நல்ல கிணறு ஒன்று இருக்கும். அந்த கிணற்றில் தான் தண்ணீர் கொண்டு சென்று தன் வீட்டில் வைத்து தண்ணீரை பயன்படுத்துவார்கள் வீட்டில் தண்ணீர் காலியாகி விட்டது என்றாள் உடனே குடங்களை எடுத்துக் கொண்டு எனக்கு அருகாமையில் உள்ள நல்ல தண்ணி உள்ள கிணறுக்கு சென்று தண்ணீர் எடுப்பார்கள். அங்குள்ள கிராமத்து மக்களும் பயத்தில் தான் அங்கு சென்று தண்ணீர் கொண்டு வருவார்கள். அந்த பாழடைந்த கிணறு பக்கத்தில் போனால் பயமும் அவர்களுக்கு நேரிடும்.
ஒருநாள் செல்வி தன் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது தண்ணீர் குடிப்பதற்காக குடத்தில் தண்ணீர் எடுப்பதற்காக பார்த்தார்கள். அப்பொழுது குடத்தில் தண்ணீர் இல்லாத நாள் செல்வி தண்ணி எடுக்க செல்வதற்கு மிகவும் பயம் வந்தது அக்கம்பக்கத்தினரும் நான் தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு செல்கிறேன் என்னோடு கூட வாருங்கள் என்று அவள் பதிலுக்கு கேட்டாள் ஆனால் யாரும் செல்வி கூட போகவில்லை. ஒரு நாள் செல்வி பயத்தில் மிகவும் பாதிக்கப்பட்டால் அந்த பயத்தினால் அவள் தண்ணீர் கூட எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது உடனே முதல்முறை அங்குள்ள கிராமத்துவாசிகள். அப்பெண்ணை கூப்பிட்டுக் கொண்டு கிணற்றுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து வீட்டுக்கு சென்றனர். செல்வி தன் மனதில் அப்பா எப்படியாவது தண்ணி நாம எடுத்துக்கிட்டு வந்தோம் இனிமேலும் போக வேண்டியது இருக்காது என்று தைரியமாக மனதில் நினைத்தால்.
உடனே ஒரு நாள் இரவு நேரத்தில் வீட்டில் சமைப்பதற்காக செல்வி ஆயத்தம் பண்ணி கொண்டு இருந்தாள். அப்போது குடத்தில் உள்ள தண்ணீரை எடுத்து சமைப்பதற்காக கூட்டத்தை பார்த்த பொழுது மீண்டும் ஆக தண்ணீர் காலியாகி விட்டது இதை அறிந்த செல்வி இன்று இரவு நேரத்தில் நான் எங்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டும். அங்கு சென்றாலும் ஏதாகிலும் பேய் வந்து என்னை பிடித்து விடும் நான் எப்படி போவது இப்பொழுது அடுப்பில் நான் சமையல் வைத்துவிட்டேனே என்ன செய்வது என்று செல்வி தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டே அங்கு பயத்தோடும் கிணற்றுக்கு அருகில் சென்றார்.
உடனே அங்கு சென்றவுடன் செல்விக்கு சுயநல விழுந்துவிட்டான் உடனே காலையில் அங்குள்ள கிராமத்துவாசிகள் கிணற்றுக்கு தண்ணீர் எடுப்பதற்காக சென்றனர். அங்கு செல்வி சுயநினைவில்லாமல் மயங்கி கிடப்பதைக் கண்ட கிராமவாசிகள் செல்வியை பேய் பிடித்திருக்கிறது என்று நினைத்து செல்வி தூக்கிக்கொண்டு வந்து கிராமத்துக்குள் வைத்து பூசாரிகளையும் மந்திரவாதிகளையும் கூட்டிக்கொண்டு வந்து செல்விக்கு பூஜை நடத்தினர் மந்திரவாதிகள் கிராமவாசிகளை நோக்கி இந்த இளம் பெண்ணுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார். அவருக்கு கிராமத்துவாசிகள் ஐயா எங்க கிராமத்தில் ஒரு பாழடைந்த கிணறு ஒன்று இருக்கிறது அங்கு சென்றால் பேய் பிசாசு போன்ற தீய சக்திகள் எங்களை பிடித்துக்கொள்ளும் என்று என் கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவள் வீட்டில் இரவு நேரத்தில் தண்ணீர் இல்லாததினால் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை எனவே அவர் அங்கு சென்று இரவு நேரத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றால் அதனால்தான் அவளுக்குப் பேய் பிடித்தது என்று கிராமத்துவாசிகள் மந்திரவாதிகளிடம் கூறினார்கள் உடனே மந்திரவாதி மந்திரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
உடனே அவர்கள் மந்திரம் செய்ய ஆரம்பித்தவுடன் செல்விக்கு என் நினைவு திரும்பவில்லை ஒருவிதமான செயலை செய்து கொண்டிருந்தால் அவர்கள் எவ்வளவோ போராடிக் கொண்டும் செல்வியை சுய நினைவு வர அவர்கள் செய்ய முடியவில்லை. அவர்கள் எவ்வளவோ போராடிப் பார்த்தார்கள் ஆனால் அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை பின்னர் தான் தெரிந்தது செல்விக்கு பேய் பிடிக்கவில்லை பயத்தினால் பைத்தியம் பிடித்துவிட்டது என்ற கிராமத்து மக்களுக்கு தெரிந்தது.
இக்கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது நமக்கு முதல் எதிரி வேற யாரும் இல்லை. நம்முடைய பயம் தான் அந்த பயம் நம்மளை சுயநினைவு இல்லாமல் செய்யும் என்பதே இக்கதையின் மூலம் தெரியப்படுத்துகிறது எந்த சூழ்நிலையிலும் நாம் பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் செல்வி நிலைமை தான் நமக்கும்.