Google AdSense Payment Method பற்றி முழுமையாக காண போகிறோம். இதில் உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் அனைத்தும் தீர்வு கிடைக்கும். முழுமையாக பார்க்கவும்.
Google AdSense இல் Add Payment Method இந்த ஆப்ஷன் எப்பொழுது வரும்?
முதலில் உங்களுடைய Google AdSense ல் வெரிஃபிகேஷன் முடித்திருக்க வேண்டும். Pin Verification and Identity Verification எந்த ஒரு பிரச்சனையும் இன்றி வெற்றிகரமாக முடிக்க வேண்டும். பின்பு உங்களுடைய Google AdSense ல் balance என்ற ஆப்ஷனில் 10 டாலருக்கு மேலாக இருக்க வேண்டும். கூகுள் ஆட்சென்ஸ் இல் வங்கி கணக்கு இணைப்பதற்கான ஆப்ஷன் காண்பிக்கப்படும். ஒரு சில பேருக்கு காண்பிக்க வில்லை என்றால் காத்திருக்க வேண்டும். இந்த மாதம் காண்பிக்க வில்லை என்றால் அடுத்த மாதம் கட்டாயமாக காண்பிக்கப்படும். ஆகையால் பொறுமையாக காத்திருக்கவும். ஒரு சில யூடியூப் சேனலில் 100 டாலர் வந்தவுடன் இந்த ஆப்ஷன் காண்பிக்கப்படும் என்று கூறியிருப்பார்கள். 100 டாலர் வந்தவுடன் உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் இல் வங்கி கணக்கு இணைப்பதற்கான நோட்டிபிகேஷன் வந்திருக்கும். வங்கி கணக்கு இணைத்த பின்பு தான் அந்த நோட்டிபிகேஷன் போகும் இல்லை என்றால் போகாது.
Google AdSense Payment Method இல் வங்கி கணக்கு யாருடையது இணைக்க வேண்டும்?
கூகுள் ஆட்சென்ஸ் இல் உள்ள நபரின் பெயரில் மட்டும் தான் வங்கி கணக்கு இணைக்க வேண்டும் என்பது கிடையாது. அந்த நபருடைய வங்கி கணக்கும் இணைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு பிரச்சனையுமின்றி வங்கி கணக்கில் பணம் கட்டாயமாக வரும்.
குறிப்பு: நீங்கள் பயன்படுத்தி வரும் கணக்குகளில் உங்களுடைய தகவல்களை கொடுப்பது மிகவும் சிறந்தது.
Google AdSense Payment Method இல் செய்யும் தவறு?
கூகுள் ஆட்சென்ஸ் இல் வங்கிக் கணக்கு இணைக்கும் போது நாம் கொடுக்கும் தகவலில் swift code இல் மட்டுமே தவறு நடக்கும். ஆகையால் சரியான swift code கொடுக்க வேண்டும். முடிந்தால் உங்களுடைய வங்கிக்குச் சென்று கேட்டு வாங்கிக் கொள்ளவும். ஆன்லைனில் எடுத்தால் ஒரு சில நபருக்கு சரியாகவும் ஒருசில நபருக்கு தவறாக இருக்கலாம். ஆகையால் நேரில் சென்று வாங்குவது சிறந்தது ஆகும். எதிர்காலத்தில் பணம் வருவதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் இருக்கலாம்.
Google AdSense Payment எந்த தேதியில் நம்முடைய வங்கிக் கணக்கிற்கு பணம் வரும்?
மாதம் 21 தேதியில் கூகுள் ஆட்சென்ஸ் இலிருந்து நம்முடைய வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புவதற்கான ஜிமெயில் உங்களுடைய மின் அஞ்சலுக்கு வரும். பின்பு ஐந்து நாட்கள் கழித்து நீங்கள் கொடுத்த வங்கி கணக்கு சரியாக இருந்தால் பணம் வரும். 26ம் தேதியன்று கட்டாயமாக பணம் கணக்கிற்கு வரும். ஒரு வேளை வரவில்லை என்றால் அந்த மாதம் முடியும் வரையும் காத்திருக்கவும். ஆனால் கட்டாயமாக கணக்கிற்கு வந்துவிடும்.
Google AdSense Payment Method
இதிலுள்ள ஒவ்வொரு ஆப்ஷன் பற்றி தெளிவாக பார்க்கலாம். பிழை இல்லாமல் சரியாக கொடுக்க வேண்டும்.
Beneficiary Id
இதை நிரப்ப வேண்டும் என்று கட்டாயம் இல்லை. என்ன என்று தெளிவாக தெரிந்த பின்பு நிரப்ப வேண்டும் இல்லை என்றால் நிரப்ப வேண்டாம். காலியாக விடவும். எதற்காக பயன்படும் என்றால் உதாரணமாக புதிதாக வங்கிக்கணக்கு உருவாக்கும்போது நீங்கள் இந்த ஆப்ஷனை கண்டிருக்கலாம். எதிர்காலத்தில் நமக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் நம் குடும்பத்தில் உள்ள நபரின் தகவல்களை இதில் கொடுக்க வேண்டும். நமக்கு பின்பு நம்முடைய கணக்கை அவர்கள் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை கொடுக்கப்படும்.
இப்பொழுது உங்களுடைய வங்கி கணக்கின் புத்தகத்தின் முதல் பக்கத்தை எடுத்துக் கொள்ளவும்.
Name on Bank Account
வங்கி கணக்கில் எப்படி பெயர் இருக்கிறதோ சிறிது கூட மாற்றமில்லாமல் அப்படியே கொடுக்க வேண்டும்.
Bank Name
உங்களுடைய வங்கியின் பெயரை கொடுக்கவும். இதில் சுருக்கமாக கொடுக்கக் கூடாது. உதாரணமாக state Bank of India எப்படி உள்ள பெயரை sbi bank இப்படி கொடுக்கக் கூடாது. உங்கள் வங்கியின் பெயர் எப்படி இருக்கிறதோ அப்படியே கொடுக்க வேண்டும்.
Account Number
உங்களுடைய வங்கிக் கணக்கின் எண்ணை பிழையில்லாமல் கொடுக்க வேண்டும்.
Retype Account Number
மீண்டும் உங்களுடைய வங்கி கணக்கின் எண்ணை கொடுக்க வேண்டும்.
Intermediary Bank (ask your bank)
FFC or FBO (ask your bank)
கூகுள் ஆட்சென்ஸ் இல் உள்ள டாலர் நம்முடைய வங்கிக் கணக்கிற்கு இந்தியன் பணமாக மாற்றி அனுப்புவதற்கு இடையில் ஒரு தரகராக வங்கி (fancies) பணி புரிகிறது. அவர்களுடைய தகவல்களை இதில் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் பலருக்கு இது தெரியாது. ஆகையால் அதை நிரப்பாமல் விடவும்.
கீழ் புறத்தில் set as primary payment method இதில் சிறிய கட்டம் இருக்கும் அதை கிளிக் செய்து சேவ் கொடுக்கவும்.
இப்பொழுது உங்களுடைய கூகுள் அட்சன்ஸ் இல் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்றாலும் மாற்ற வேண்டும் என்றாலும் அதற்கான வசதி கொடுக்கப்பட்டிருக்கும். வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளவும்.
முதலில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்றால் மாற்றாக இன்னொரு வங்கி கணக்கை இணைத்துக் கொள்ள வேண்டும். முதலில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்கில் ஏதாவது பிரச்சனை என்றால் இரண்டாவது கொடுக்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் அனுப்பப்படும்.
இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. பயனுள்ள தகவலாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும்.