Google AdSense Pin Verification இல் செய்யும் தவறு?
பெரும்பாலும் முகவரியில் மட்டுமே தவறு நடக்கும். ஆகையால் நீங்கள் தற்போது எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டின் முகவரியை பிழை இல்லாமல் கொடுக்க வேண்டும்.
கவர்மெண்ட் டாக்குமெண்டில் இருக்க வேண்டிய முகவரி தான் கொடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.
நீங்கள் இந்த முகவரியில் வசித்து வருகிறார்கள் என்பதனை சரிபார்க்க மட்டுமே இந்த கடிதம் உங்களுக்கு அனுப்பப் படுகிறது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் Pincode ல் தவறு செய்தேன் ஆனால் எனக்கு முகவரி சரியாக இருந்ததால் கடிதம் வீட்டிற்கு வந்தது.
குறிப்பு: நீங்கள் வசிக்கும் முகவரியை கொடுக்கவும்
Google AdSense Pin Verification எத்தனை நாட்களில் வரும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
கூகுள் ஆட்சென்ஸ் ஹோம் பேஜ் யினை சிறிது கீழே தள்ளவும். பின் வெரிஃபிகேஷன் செய்வதற்காக சிறிய கட்டம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். (Verify your billing address) இதில் சிறிது கவனிக்கவும். அதில் ஒரு தேதி கொடுக்கப்பட்டிருக்கும் அந்த தேதியிலிருந்து இரண்டு இல்லை நான்கு வாரத்திற்குள் கூகுள் அட்சன்ஸ் இருந்து Pin Verification செய்வதற்கான கடிதம் உங்கள் வீட்டிற்கு வரும் என்பதனை குறிப்பிடப்பட்டிருக்கும்.
Google AdSense Pin Verification நம்முடைய வீட்டுக்கு எத்தனை நாட்களில் வரும்?
குறைந்தது 30 இல்லை 40 நாட்களுக்குள் நீங்கள் கொடுத்த முகவரிக்கு கடிதம் வரும். தற்போது 15 நாட்களுக்குள் சீக்கிரமாகவும் வருகிறது.
தவறு ஏற்பட்டால் மீண்டும் எத்தனை முறை Pin Verification க்கு அப்ளை செய்யலாம்?
Google AdSense Pin Verification மூன்று முறை வாய்ப்பு கொடுக்கப்படும். மூன்று முறையும் தவறு செய்தால் உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் கணக்கினை வைத்திருப்பதற்கு அர்த்தமில்லை. பின் வெரிஃபிகேஷன் செய்வதற்காக மெயில் வந்திருந்தாள் அதைத் தாண்டி இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.
AdSense Pin Verification Letter ல் என்ன இருக்கும்?
கடிதத்தின் முன்பகுதியில் மேல்புறத்தில் சிறிது கூகுள் ஆக்சன்ஸ் லோகோ கொடுக்கப்பட்டிருக்கும். அதன் பக்கத்தில் கடிதத்தின் (speed post) வகை இருக்கும். பின்பு உங்களுடைய முகவரி மற்றும் அன் டெலிவரி செய்வதற்கான முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். பின்பகுதியில் கூகுள் அட்சன்ஸ் லோகம் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். கடிதத்தின் உள்பகுதியில் இடதுபுறம் வெறும் கூகுள் டிசைன் மட்டுமே இருக்கும். வலதுபுறத்தில் கூகுள் ஆட்சென்ஸ் பின் வெரிஃபிகேஷன் செய்வதற்கான 6 எண் கொடுக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி எப்படி வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் என்பதனையும் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும்.
Google AdSense Pin Verification எப்படி சரியாக செய்ய வேண்டும்?
கூகுள் அட்சன்ஸ் Homepage னை முதலில் ஓபன் செய்து கொள்ளவும். பின்பு சிறிது கீழே தள்ளவும். சிறிய கட்டத்தில் verify your billing address என கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி இல்லை என்றால் மேல் பகுதியில் மூன்று வரிகள் கொண்ட செட்டிங்ஸ் ஐ கிளிக் செய்யவும். Account ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் account information என்ற ஆப்ஷனில் verify address கொடுக்கப்பட்டிருக்கும். இதை கிளிக் செய்து அந்த 6 pin number submit செய்ய வேண்டும். கூகுள் ஆட்சென்ஸ் ஹோம் பேஜில் உள்ளவை எளிமையான வழியாகும். ஆகையால் அதை தேர்ந்தெடுக்கவும். Verify your billing address கீழ்ப்புறத்தில் pin number என்டர் செய்வதற்காக இடம் கொடுக்கப் பட்டிருக்கும். அதை கிளிக் செய்து கடிதத்தில் வந்த அவர் பின் எண்ணை டைப் செய்து சமர்ப்பிக்கவும். தற்போது பின் வெரிஃபிகேஷன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதைப் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.
மேலும் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் இருந்தால் அதை Comments பதிவுசெய்யவும். பயனுள்ள தகவலாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும்.