உஷாரய்யா உஷாரு (Usarayyaa Usaru) - Tamil Kids Stories (தமிழ் சிறுகதைகள்)

0

  

உஷாரய்யா உஷாரு (Usarayyaa Usaru) -  Tamil Kids Stories (தமிழ் சிறுகதைகள்)

           எனக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆகியிருக்கிறது. கணவர் துபாயில் வேலைபார்க்கிறார். நான் இங்கு நகை கடை ஒன்றில் விற்பனையாளர் பிரிவில் வேலைபார்க்கிறேன். செல்போனில் பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவைகளில் எல்லாம் எனக்கு ஈடுபாடு கிடையாது. அதனால் சாதாரண செல்போன்தான் வைத்திருந்தேன். அதில் என் கணவரோடு பேச மட்டும்தான் முடியும். 

கடந்த ஆண்டு ஊருக்கு வந்த அவர், விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை எனக்கு பிறந்த நாள் பரிசாக வாங்கிக்கொடுத்தார். அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாது. கணவரே வாட்ஸ்-அப் போன்றவைகளை இன்ஸ்டால் செய்துகொடுத்தார். அவர் வெளிநாடு சென்ற இரண்டு மாதங்களில் எப்படியோ எனது வாட்ஸ்-அப் செயல்படாமல் போய்விட்டது. 

நான் வேலைபார்த்த நிறுவனத்தில் என்னோடு திருமணமாகாத இளைஞன் ஒருவன் வேலைபார்த்துக்கொண்டிருந்தான். அவன் அங்கு வேலைபார்க்கும் எல்லா பெண்களிடமும் சகஜமாக பழகுவான். ஸ்மார்ட் போன் தொழில்நுட்பங்களையும் எளிதாக கையாளுவான். எனக்கு வாட்ஸ்-அப் கிடைக்காத தகவலை சொன்னதும் மீண்டும் இன்ஸ்டால் செய்துகொடுத்தான். அவன் எனக்கு பேஸ்புக் அக்கவுண்டும் ஓப்பன் செய்து தந்தான். அதில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தான். அதோடு நல்ல மெசேஜ்களையும், படங்களையும் எனக்கு ஷேர் செய்துகொண்டிருந்தான். 

ஒருமுறை என் மகன் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டான். மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, உதவிக்கு ஆள் இன்றி நான் தவித்தபோது, அவன் வந்து எனக்கு பல்வேறு விதங்களில் உதவினான். அதனால் நான் அவனிடம் நன்றி பாராட்டத் தொடங்கினேன். அதன் பிறகு என் வீட்டிற்கும் வந்து போயிருந்தான். முதுமையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் என் அம்மாவிடமும் நல்ல பெயர் வாங்கிவிட்டான். அதனால் அவன் வீட்டிற்கு வந்துபோவது அதிகரித்தது. இவர் இவன் என்னுடைய வீட்டிற்கு வந்து போவதினால் இணையத்தில் எங்கெங்கு என்னென்ன பணம் இருக்கும் என்பதை அவன் பார்த்துக்கொண்டிருந்தான் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் அதிகமாக இருந்து வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் இதேபோல் அவன் தினமும் வீட்டிற்கு வருவது வழக்கமாக இருக்கும் நான் அவனை நல்ல பையன் என்று நினைத்தேன் ஆனால் திருட்டுதனம் அப்போது எனக்கு தெரியவில்லை உடனே ஒரு நாள் என்னிடம் வந்து தனியாக பேச என்று கூறினால் உடனே நான் என்னவென்று தெரியவில்லை என்று கோபத்துடன் வந்த உடன் என்னை வீட்டில் உள்ள வேலையை செய்ய காண்பிக்குமாறு அனுப்பிவிட்டான் பின்னர் வீட்டில் உள்ள அரசனிடம் சென்று அங்கு வைத்து இருக்கும் படங்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான் இவ்வாறாக நான் அவனிடம் ஏமாந்து போனேன். 

ஆம் அதன் மூலம் தெரிந்து கொள்வது என்னவென்றால் நமக்கு உதவுகிறார்கள் என்று எல்லாருமே நம்பிவிட வேண்டாம் என்பது கதையின் மூலம் தெரிந்து கொள்கிறோம் அதுமட்டுமல்லாமல் நாம் நம்பினால் இந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமைதான் நமக்கு ஏற்படும் ஆகவே நமது வீட்டில் யாரையும் சார்ந்து இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்கிறோம் அதுமட்டுமல்லாமல் அப்படி சேர்த்துக் கொண்டாலும் வீட்டில் என்னென்ன இருக்கும் என்பதை அவரிடம் செல்ல வேண்டாம் என்பதைத் அதன் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!