இவன் பெயர் கார்த்திக். இவன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை தான் பார்க்க போகிறோம்.
இப்போது இவன் வயது 21. கார்த்திக் தாயின் வயிற்றில் மூன்று மாதம் இருக்கும்போதே அவனின் அப்பா இறந்து போனார். இவனுக்கு ஒரு அக்கா உள்ளாள். அவனின் அப்பா இருக்கும் போது அக்காவிற்கு உரிமையும் அம்மாவிற்கு 18 வயதும் தான் இருக்கும். சிறிய வயதிலேயே அவன் அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தன் கணவனுடன் இரண்டு ஆண்டுகள்தான் வாழ்ந்து இருப்பார். இவர்களுக்கு இடையே சிறிய பிரச்சனையில் அவரின் அப்பா கோபித்துக் கொண்டு சென்று இதேபோன்று செயல்களை செய்து உள்ளார்.
சிறிது நேரம் இருவரும் மனம் விட்டு பேசி இருந்தால் கார்த்திக் அப்பா இறந்து போயிருக்க மாட்டார். ஆணவம் தான் முக்கிய காரணமாகும். மனைவி கணவனுக்கு விட்டுக்கொடுத்து போயிருந்தாள் இவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறி இருக்கிறது.
எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் இருவருக்குள் யாராவது விட்டுக்கொடுத்து போகணும் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்.
எதுவுமே தெரியாமல் அமைதியாக தாயின் வயிற்றில் இருக்கும்போதே கார்த்திகை வேண்டாம் என்று அவனை நிரந்தரமாக வேண்டும் என்று முடிவு எடுத்தனர். ஒரு பாவமும் அறியாத அவனுக்கு என்ன தெரியும். வெளிச்சம் காணாத அவனுக்கு என்ன தான் தெரியும்.
கணவன் இறந்தவுடன் மூன்று மாதத்துடன் தன் பிள்ளையுடன் தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். கார்த்திக் பாட்டி தன் வயிற்றில் இருப்பதை நமக்கு தேவையில்லை அதனால் கலைத்துவிடு. வேறொரு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறினார். அப்போது கூட கார்த்திக் தாயார் மருத்து கொண்டிருந்தார். அனைவரும் சேர்ந்து இவரின் மனதை மாற்ற தனி ஒருவரால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒருசில செயல்களை கலைப்பதற்காக மேற்கொண்டார். பப்பாளி பழத்தை சாப்பிடுவது போன்ற செயல்கள் தான். ஆனால் வயிற்றில் இருக்கும்போதே கார்த்திக்கிற்கு ஒன்றுமே ஆகவில்லை. இந்த உலகத்தை பார்ப்பதற்கு முன்பே பல பிரச்சனைகள் வருகிறது. இவன் இந்த உலகத்தில் வந்தால் என்னென்ன பிரச்சனைகளை பார்க்கப் போகிறானோ!
இவர்களின் வீடு கூரை வீடுதான். மழைக்காலத்தில் வீட்டில் அங்கும் இங்கும் ஒடி கொண்டிருக்கும். பல நாட்கள் தன் கணவன் இல்லாமல் இவனின் தாயார் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். வேறொரு திருமணமும் செய்து கொள்ளவில்லை. தன் பிள்ளைக்காக வாழப்போகிறேன் என்று தனி பெண்ணாக தன்னம்பிக்கையாக இருந்தார். ஒரு பெண் தனியாக இவ்வுலகத்தில் வாழ்ந்தால் இந்த சமுதாயம் நல்லவிதமாக பேசுமா?தவறே செய்யாமல் இருந்தாலும் தவறு செய்து இருப்பீர்கள் என்றுதான் கூறும் சமுதாயம் இது.
பிறப்பதற்கு முன்பே பல பிரச்சனைகளை தாண்டி இவ்வுலகத்தில் பிறந்தான் கார்த்திக்.சிறிய வயதில் அவனின் நண்பர்களுடன் விளையாடும் போது நண்பர்கள் கூறுவார்கள் எனக்கு என் அப்பா புதிய ஆடை வாங்கி வந்தார்.எனக்கு என்னப்பா விளையாட பொம்மைகள் வாங்கி வந்தார் என்று அவனின் நண்பர்கள் அனைவரும் கூறும் போது அவனின் உடையை பார்ப்பான். சிறிதளவில் விளையாடி விளையாடி ஒரு சில இடங்களில் ஆடைகள் கிழிந்து போய் இருக்கும். அதிக அளவில் உடைகளும் கிடையாது. கையில் பழைய உடைந்த பொம்மையை வைத்து இருப்பான்.
இவன் நண்பன் இவனைப் பார்த்து சிரிப்பார்கள். கார்த்திக் இப்படி இருப்பது யார் தவறு? இவன் தவறா? கிடையாது. இவ்வுலகில் and ஒருவனாலே சம்பாதிக்க முடியவில்லை. பல நபர்களுக்கு வேலையை கிடைக்காமலும் உள்ளது. இந்நிலையில் பெண் ஒருவரால் என்ன செய்வாள்.வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவாரா இல்லை மற்ற செலவுகளை பார்ப்பாரா!
குழந்தைப் பருவம் என்பதால் தன் தாயிடம் அப்பா எங்கே என்று கேட்டு தினமும் அழுவான். இவனின் தாயார் என்ன கூறுவதென்று தெரியாமல் அவரும் சேர்ந்து அழுவாள்.சிறுபிள்ளை அப்பா இல்லை என்று கூறினால் மனம் வருத்தப்படுவான் அதுமட்டுமின்றி கருத்து கூட தெரியாது என்று கண்ணீர் விட்டு அழுதாள். இப்படியே நாட்கள் கடந்தன. சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டு வந்தான். இவன் வளரும்போதே இவனின் குறும்புத்தனமும் வளர்ந்தது.இவனுக்கு பத்து வயது இருக்கும் போது பல அட்டகாசம் செய்வான். செய்யாத தவறுக்கு இவன் தான் மாட்டிக் கொள்வான்.
அப்படி ஒரு நாள் மார்கழி மாதம் என்பதால் மாலை நேரத்தில் குளிரும்.அப்படி குளிரும்போது குளிருக்கு இதமாக குளிர் காயலாம் என்று எண்ணி இவர்கள் நண்பர்கள் எல்லாம் பார்வைக்கு வகிப்போரின் அருகில் வந்தனர். கார்த்திக் தான் தீப்பெட்டி எடுத்து வந்தான். ஓகே போரில் சிறிது வைக்கோல் இடத்தில் பக்கத்திலேயே பற்ற வைத்தார்கள். கார்த்திக் தீப்பெட்டி கொண்டு வந்தான் தவிர வேற எந்த ஒரு செயலும் செய்யவில்லை. நண்பர்கள் பற்ற வைத்தனர். பக்கத்தில் வைக்க போல் இருந்ததால் தீயானது அதனை நோக்கி சென்றது. கார்த்திகை தவிர அனைவரும் வீட்டிற்கு ஓடிவிட்டனர். கார்த்திக் நல்ல மனம் கொண்டவன்.தீ பற்ற கூடாது என்று எண்ணி தனியாக செடிகளை பிடுங்கி தீயின் மீது அடிக்கிறான் அணியவில்லை. மண்ணள்ளிப் போடுகிறான் அப்பயும் அணையவில்லை. அணைக்க முடியாது என்று தெரிந்த உடன் வைக்கப்போறேன் சிறிது தூரம் ஓடிச்சென்று காலைக்கடன் போவது போன்று அமர்ந்துகொண்டான். ஏனென்றால் இவர்கள் செய்தது எல்லாம் பாதையில்தான்.
புகைப்பதை கண்டு ஊரில் உள்ள அனைவரும் வந்து தீயை அணைத்தனர். இதை யார் பற்ற வைத்தனர் என்று அக்கம் பக்கம் பார்க்கும்போது காத்திருப்பதை கண்டு அவனை அழைத்து அவனிடம் தீப்பெட்டி உள்ளதா என்று பார்த்தனர். அவன் வைத்திருந்தான். அவன்தான் பற்ற வைத்து இருப்பான் என்று அனைவரும் நம்பினர். அவனின் நண்பர்கள் ஒன்றுமே தெரியாதது போன்று தன் பெற்றோர்களுடன் வந்து பார்த்தனர். தீப்பெட்டி மட்டும் கொண்டு வந்தான். கூட நின்று வேடிக்கை பார்த்தான். பற்ற வைத்த தீயை அணைக்க முயன்றான். தீயை பற்ற வைத்தது அவனின் நண்பர்கள் கடைசியில் தீய பெயர் கார்த்திக்கு வந்தது.இவனின் நண்பர்களின் பெற்றோர்கள்தான் இவனுக்கு புதிய பெயரை உருவாக்கினார். இந்த செயலை செய்தது அவர்கள் இல்லை என்று தெரியாது. இவனுக்கு பழி சுமக்க காரணம் எனக்கு அப்பா கிடையாது என்ற ஒரே காரணம்தான்.
அதிகமா அழைத்து அடித்து கேட்டார். அழுதுகொண்டே நடந்ததை அனைத்தும் கூறினான். பாரி யார் தவறு செய்தார்கள் உன் மேல் பழி வந்துள்ளது என்று இனிமேல் வீட்டிற்கு உள்ளே இரு என்றார்.
10 நாட்களாக வீட்டிலேயே இருந்தான். பின்பு பள்ளி திறந்தனர். பள்ளிக்குச் சென்றான். பள்ளிக்குச் சென்று இவனின் அறிவும் குறும்புத்தனமும் சிறிதுகூட அடங்கவில்லை.