பள்ளி திறந்து பல நாட்கள் கடந்தன. இவனுடன் ஆறு நபர்கள் மட்டும் தான் வகுப்பில் படித்தனர். அதாவது அரசு பள்ளி என்பதால் மாணவர்கள் குறைவு. ஒரு வகுப்பில் 5 முதல் 20 மாணவர்கள் மட்டும் தான் இருப்பார்கள். மொத்தமாகவே பள்ளியில் 30 மாணவர்கள் தான் பயின்றனர். இரண்டு ஊருக்கும் பொதுவான பள்ளி. இரு ஊரிலும் 150 சிறுவர்கள் இருப்பார்கள். ஆனால் 30 மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். மற்ற 120 சிறுவர்களும் தனியார் பள்ளியில்தான் பயின்று வருகின்றார்கள். முதல் வகுப்பிலிருந்து கல்லூரி முடிக்கும் வரையிலும் தனியார் நிறுவனத்தில் பயில வேண்டியது. பின்பு இறுதியில் வேலை மட்டும் அரசாங்கம் வேலைதான் வேண்டும் என்றால் என்ன நியாயம்?
அனைவரும் நம் ஊருக்கு நல்லது நடக்காதா என்று ஏங்கினாள் மட்டும் பற்றாது. ஊரில் உள்ள அரசு பள்ளிகளை நடத்த உதவி செய்யுங்கள். முதலில் உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள். படிக்கும் பிள்ளைகள் தனியார் பள்ளியில் படித்தால் மட்டும் தானாக படிப்பு வராது. படிக்கும் பிள்ளைகளுக்கு பள்ளி அவசியம் கிடையாது.
இன்று அரசு பள்ளி மூடினால் மீண்டும் நம் ஊருக்கு நல்லது எப்படி நடக்கும் என்று சிறிது யோசிக்க பார்க்க மாட்டீர்களா!
கார்த்திக் உடன் 4 ஆண்களும் ஒரு பெண்ணும் படித்தார்.இவன் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியருக்கு எலுமிச்சைபழம் வேண்டும் என்று கார்த்திகையும் அவனின் நண்பனையும் இருக்கிறதா இல்லையா என்று பார்த்து வாருங்கள் என்று அவருக்கு கூறி அனுப்பினார்.
மரத்து காரர் வீட்டில் இல்லாமல் வயல்வெளியில் இருந்ததால் நாளை பழங்களை அரைத்து கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் கார்த்திக் என்ன செய்தான் தெரியுமா? ஆசிரியரும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று எண்ணி வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்தில் ஏறி 50 பழங்களை மரத்தின் சொந்தக்காரரிடம் கூறாமல் அறுத்து சென்று விட்டான்.ஆசிரியரிடமிருந்து பணம் நாளைக்கு வாங்கி கொடுக்கலாம் என்று எண்ணி பள்ளிக்கு சென்று பணத்தை ஆசிரியரிடம் கொடுத்தான். அவரும் பாராட்டினார். இவன் செய்த செயல் அவருக்கு தெரியாது. பணம் நாளை கொடுக்கிறேன் என்று கூறினார். மரத்தில் பழங்களை குறைந்துள்ளது.சொந்தக்காரருக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று சிறிதும் யோசிக்காமல் பழங்களை எடுத்து சென்றான். மீண்டும் வீடு திரும்பும்போது வீட்டிற்கு வந்தால் ஒரே திட்டு வாங்குகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாகவே நின்றான். ஆனால் இவன் மூளை இவனுக்கு மட்டும் தான் தெரியும்.
மரத்தின் சொந்தக்காரர் நாளை அறுத்து தருவார் அதுவரைக்கும் காத்திருக்க முடியாது என்று எண்ணி ஏன் நாமே பழத்தை எடுத்துச் சென்று பணத்தை நாளை கொண்டுவந்து தந்து விடலாம் என்று யோசித்தான். கடைசியில் திட்டு தான் மிச்சம் அவனுக்கு. ஆசிரியருக்கு நடந்தது தெரியவந்தது. மறுநாளே பணத்தை மாணவர்களிடம் கொடுத்து மருத்துவரிடம் கொடுக்க சொன்னார். இவனுக்கு அசிங்கம் ஆகிவிட்டது.
யாரிடமும் அதிகமாக பேசுவது கிடையாது. சிறிது நாட்களாக தனியாகவே இருந்தான். பின்பு பழைய நிலைக்கு வந்து விட்டான்.
ஒரு வாரத்திற்கு பின்பு விடுமுறை நாளில் அவனின் ஊரில் ஐஸ் விற்பவர் வந்திருந்தான். ஊரில் சிறுவர்கள் அனைவரும் வாங்கி சாப்பிட்டனர் அவன தவிர, அவன் நண்பர்கள் அவனை பார்த்து கேலி செய்தனர். அவனுக்கும் ஐஸ் உண்ண வேண்டும் என்று ஆசைதான். அம்மாவிடம் சென்று கேட்டான். அன்று பார்த்து அம்மாவிடம் சுத்தமாக பணம் கிடையாது. மற்ற நேரங்களில் எல்லாம் கார்த்திக் அமைதியாக விடுவான்.அன்று பார்த்து கேலி செய்ததால் அழுதுகொண்டே இருந்தான். ஐஸ் விற்பவரிடம் என்று அழுது இருந்தான். ஆனால் யாருமே அவனுக்கு வாங்கி தரவில்லை. வியாபாரியும் சென்றுவிட்டார்.சென்ற பின்பும் கூட நடுரோட்டில் படுத்துக் கொண்டு அழுதான். அன்று முழுக்க அழுகைதான்.அப்போதுகூட அவனுக்கு அப்பா என்பவர் பற்றி தெரியாது.
தன் பிள்ளைக்கு ஒரு ஐந்து ரூபாய் கூட உதவ முடியவில்லையே என்று கார்த்திக்கின் அம்மா வீட்டில் அழுது கொண்டிருந்தார். கார்த்திக் நடுரோட்டில் அழகு டுடே என்று மிகவும் கவலைப்பட்டார்.
கார்த்திக் அங்கு அழ இவன் அம்மா வீட்டில் அழுவது தெரியாது. அப்படித் தெரிந்தாலும் ஏன் நம் தாயார் அழுகிறார் என்று அவனுக்கு கருத்தும் தெரியாது.சிறிய வயதில் நமக்கு பிடித்ததை கிடைக்காமல் போனால் எப்படியாவது அடம்பிடித்து வாங்குவோம் அல்லவா? அதேபோன்றுதான் இவனும்,
இவன் வாழ்க்கையில் அழுகை மட்டும் நிலையாக இருந்தது.