முன்னொரு காலத்தில் சிங்காரம் என்று ஒரு ஊர் இருந்தது. அந்த ஊர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அந்த ஊரில் முனியப்பன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். அவனுக்கு சில ஆடுகளும் இருந்தது.
முனியப்பனுக்கு ஆட்டை வயலுக்கு சென்று மேய்த்து வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்தது. முனியப்பன் இன் மகனும் ஆனந்தன் அவனுக்கு வேலை செய்வது என்றாலே அலர்ஜி மற்றவர்களை கேலி செய்வதும் விளையாடுவதும் ஒரு தொழிலாக வைத்திருந்தான். ஒரு நாள் முனியப்பன் ஆனந்தனை கூப்பிட்டான். ஆனந்தன் என்னவென்று கேட்டான் அதற்கு முனியப்பன் உனக்கு சரியாக படிப்புதான் வரமாட்டுது வேலை ஆச்சு செய்யலாமே என்று கூறினான். அதற்கு ஆனந்தன் இப்ப என்ன விஷயம் என்று கேட்டான்.
முனியப்பன் நான் வெளியூருக்கு செல்ல போகிறேன் இந்த ஆட்டை பார்த்துக்கொள் என்று கூறினார். ஆனந்தன் அதை மறுத்து விட்டான். ஆனந்தனின் அம்மா அப்படி கூறாத டா என்று சொன்னாள். அப்போது ஆனந்தன் தன் அம்மா பேச்சை கேட்டு ஆடுகளை மேய்க்க சென்றான். வேலை செய்வதில் ஆனந்தனுக்கு ஈடுபாடு இல்லை பக்கத்தில் வயலின் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆனந்தன் புலி வருது என்று கூச்சலிட்டான். பக்கத்தில் இருந்தவர்கள் கட்டையோடு வந்து எங்கே புலி என்று ஆனந்தின் இடம் கேட்டனர்.
ஆனந்தன் என் பேச்சு துணைக்கு ஆள் யாரும் இல்லை அதனால்தான் பொய் உரைத்தேன் என்றான். அவர்கள் கோபமடைந்து உனக்குத்தான் வேலை வெட்டி இல்லை எங்களுக்கு இல்லை என்று கூறினார்கள். மறுநாளும் ஆனந்தன் ஆடைகளை மேய்க்கச் செல்லும் போது இதே பொய் கூறி மக்களை அச்சுறுத்தினார். அப்போது சிலர் கோபமடைந்து ஆனந்தனை தீட்டினார்கள். அதை ஆனந்தன் மிகவும் ரசித்தான். அடுத்தநாள் ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது உண்மையில் ஒரு புலி வந்தது ஆட்டை கடித்து குதறியது. அப்போது ஆனந்தன் புலி புலி என்று கத்திய போது ஒருவரும் வரவில்லை ஆனந்தனின் ஆடும் பரி போனது. ஆனந்தன் மிகவும் வருத்தப்பட்டான் பொய் கூற கூடாது என்று முடிவு செய்தான்.