
ஒரு ஊர்ல அஞ்சம்மாள் என்னும் ஒரு பாட்டி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு வயது 60 இருக்கும். அவளுக்கு கணவன் பிள்ளைகள் என்று யாரும் கிடையாது. அவளுக்கு அதைப்பற்றி கவலையும் கிடையாது. அவள் பணத்தை வட்டிக்கு விடுவது குறியாக இருந்தாள். அந்தப் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு வட்டி விடுவாள். அந்த ஏழை மக்களும் அவளிடம் வட்டிக்கு வாங்கிவிட்டு மிகவும் சிரமப்பட்டனர். வட்டி தாமதம் ஆகினால் அதற்கு அநியாயம் வட்டி விட்டு இருப்பாள்.
அந்த ஊர் மக்களும் இவள் இந்தப் பணத்தை அநியாய வட்டிக்கு விட்டு என்ன சாதிக்க போகிறாள். அந்தப் பேராசை இவளுக்கு எதற்கு பிள்ளைகளும் இவர்களுக்கு கிடையாது அப்புறம் இந்த பணத்தை வைத்து இவர் என்ன பண்ண போகிறாள் என்று பலரும் பல படி ஊரில் பேசினார்கள்.
அந்த ஊரில் அந்த பாட்டியை பற்றி ஒருவன் அறிந்தான் அவளிடம் இருக்கும் பணத்தை ஏமாற்றி பறிக்க நினைத்தான். அதற்கு ஒரு திட்டம் திட்டினான். அவனிடம் இரு கூட்டாளிகளை இணைத்தான். அந்த பாட்டியிடம் இருக்கும் நிலங்களை ஏமாற்றி பறிக்க நினைத்தான். அந்த இருவரையும் ஜமீந்தார் வேடத்தில் அந்த பாட்டி வீட்டிற்கு சென்று அந்த நிலங்களை பறிக்க சொன்னான்.
அவர்களும் ஜமீன்தார் வேடமிட்டு அந்த பாட்டி வீட்டிற்குச் சென்று வீட்டில் யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டார்கள். அதற்கு பாட்டி வெளியே வந்து யார் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்டது. அதற்கவர்கள் நாங்கள் பக்கத்து ஊர் கலசபாக்கம் ஜமீன்தார்கள் நாங்கள் இங்கு நிலம் வாங்கலாம் என்று வந்து இருக்கோம் என்றார்கள். ஊரில் நீங்கள்தான் பெரிய இடமா ஊர் மக்கள் மக்கள் உங்களை பற்றி சொன்னார்கள் அதனால் தான் உங்களிடம் வந்துள்ளோம் என்று ஜமீன்தார்கள் பாட்டியிடம் கூறினார்கள்.
ஓஹோ அப்படியா சரியாதான் சொல்லி இருக்கிறார்கள் உங்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டும் என்று கேட்டாள். எங்களுக்கு 10 காணி நிலம் குறைந்த விலையில் வேண்டும் என்று ஜமீன்தார்கள் சொன்னார்கள். அதற்கு பாட்டி சரி நீங்கள் சொல்லும் விலைக்கு கொடுத்துவிடலாம் என்று கூறினார்கள். ஜமீந்தார்கள் நீங்கள் பத்திரத்தை எடுத்து வாருங்கள் பேசி முடித்துவிடலாம் என்று கூறினார்கள். பாட்டியோ பத்திரத்தை எடுத்து வந்தவுடன் அவர்கள் அந்த பத்திரத்தை பிடுங்கி விட்டு ஓடினார்கள்.
பாட்டி திருடர்கள் திருடர்கள் என்று கூச்சலிட்டாள். அதுகண்ட ஊர் மக்கள் அவர்களை அடித்துவிட்டு பத்திரத்தை பாட்டியிடம் வாங்கி தந்தார்கள். பாட்டி மனம் கலங்கி வருந்தினாள். அதற்குப் பிறகு ஊர் மக்களுக்கு கஷ்டத்துக்கு பணம் தந்து உதவினால். பாட்டி உணர்ந்தாள் நம்மளுக்கு பணம் நிலம் முக்கியமில்லை ஊர்மக்கள் தான் நமக்கு பணம் நிலம் எல்லாமே!
அதைக்கண்ட ஊர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். பாட்டி மகிழ்ச்சியுடன் ஆனந்தத்துடன் வாழ ஆரம்பித்தாள். உண்மையான மகிழ்ச்சி என்னவென்று அப்போது தான் பாட்டி உணர்ந்தாள். பாட்டி ஊர் மக்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்துவிட்டாள். பின்னர் பாட்டி இறந்து விட்டாள். அவளை ஊர்மக்கள் கலங்கி மனம் வருந்தி சமுதாயத்துடன் அவரை அடக்கம் செய்தனர்.