
ஒரு ஊர்ல ஒரு அழகான கிராமம் அந்த கிராமத்து பக்கத்துல ஒரு அடர்ந்த காடு இருந்தது. அங்க தான் எல்லா மிருகங்களும் வாழும் சின்ன மிருகம் பெரிய மிருகம் போன்ற எல்லா விலங்குகளும் அங்க தான் இருந்தது. காடு நா அதுல ஒரு ராஜா இருப்பாரு அந்த ராஜா தான் நம்ம சிங்கம். அங்க இருக்கிற எல்லா விலங்குகளும் சிங்கராஜா சிங்கராஜா என்று அழைக்கும். ஆனால் நம்ப சிங்கராஜா மிகவும் கோபம் ஆனவர். பசி எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எதிர்ல இருக்க விலங்குகளை கடித்து உண்பார்.
அதனால அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் முன் வருவதற்கு மிகவும் அச்சப்படும். சிங்கத்தின் சர்வாதிகாரம் எந்த விலங்குக்கும் பிடிக்கவில்லை. அதனால அனைத்து மிருகங்களும் ஒரு முடிவு செய்து அதை சிங்க ராஜா விடம் சொல்ல தயங்கி தயங்கி சென்றார்கள். அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் குகைக்கு சென்றன. கரடி சிங்கராஜா என்று அழைத்தது. அதற்கு சிங்கம் யார் என் குகைக்கு முன் வந்து கத்துவது என்று கோபத்துடன் கேட்டது. மகாராஜா நாங்கள் உன்னிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று யானை கூறியது.
நீங்கள் கோபப்படாமல் இந்த விஷயத்தை கேட்க வேண்டும் என்று யானை கூறியது. அதற்கு சிங்கம் எனது அடிமைகள் நீங்கள் சொல்லி நான் கேட்பது என்று கூறியது. அதற்கு மான் இது வீண் வேலை இது செய்யவேண்டாம் என்று நான் அப்பவே சொன்னேன் நீங்கள் கேட்டீர்களா என்றது. ராஜாவே உங்களுக்கு வயசு ஆகிவிட்டது அதனால் உங்களால் சரியாக நடக்க முடியவில்லை எனவே நீங்கள் குகைக்குள்ளே இருங்கள். நாங்களே தானாக முன் வந்து உங்களுக்கு இறை ஆகிறோம் என்று குரங்கு கூறியது.
சிங்கம் நல்ல யோசனை என்னை ஏமாற்ற நினைத்தீர்களா நான் எல்லாரையும் மொத்தமாக கொன்றுவிடுவேன் என்று கூறியது. அதன் பிறகு எல்லா விலங்குகளும் கலைந்து போகின. குரங்கு கூறியபடி ஒவ்வொரு விலங்கும் வந்து சிங்கத்திற்கு இறை ஆகின.
முயல் செல்ல வேண்டிய நாள் தாய் முயலுக்கு செல்ல மனம் வரவில்லை. என்ன பண்றது அரசுக்கு வாக்கு கொடுத்தாச்ச. நீரும் கவலையும் தாய் முயல் குட்டியை அனுப்பி வைத்தது. இந்த குட்டி புத்திசாலி முயல் ஆடிப்பாடி சென்றது. அங்கேயோ சிங்கம் மிகவும் பசியுடன் கோபத்தில் காத்திருந்தது. சிங்கம் வரட்டும் அந்த குட்டி முயல் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு அதை வறுத்து எடுக்கிறேன். முயல் வந்து வணக்கம் ராஜா என்றது. என்னை மன்னித்துவிடுங்கள் என்றது. அதற்கு சிங்கம் அற்ப முயலே நான் பசி தாங்காத அவன் என்று உங்கள் அம்மா உனக்கு கூறவில்லையா என்றது. ராஜாவே எப்படியும் நான் உங்களுக்கு உணவாக தானாக போகிறேன் என் தாமதத்திற்கு காரணம் அருந்திவிட்டு என்னை உண்ணுங்கள் என்றது முயல்.
சொல்லு சீக்கிரம் எனக்கு மிகவும் பசிக்கிறது என்றது சிங்கம். முயல் வரும் வழியில் உங்களைப் போலவே ஒரு சிங்கத்தை பார்த்தேன் உன்னை எதிரி என்றும் உங்கள் பலத்தை பற்றி இழிவாகவும் பேசியது. எனக்கு எதிரியா யார் அவன் எங்க இருக்கான் எனக்கு காட்டு என்று சிங்கம் கேட்டது. வேண்டாம் மன்னா நீங்களே பசியோடு இருக்கிறீர்கள் முதலில் என்னை உண்ணுங்கள் பிறகு அவனை தேடலாம் என்று முயல் கூறியது. இப்போது எனக்கு பசி இல்லை வெறி தான் இருக்கிறது அவனை அழிக்க வேண்டும் என்ற வெறி. நீங்களோ காட்டுக்கு ராஜா அவனிடம் மோதி உங்களின் உயிர் போய்விட்டால் என்ன செய்வது என்று முயல் கூறியது. என் உயிர் போனாலும் பரவாயில்லை எனக்கு எதிரி யார் இந்த காட்டி இருக்கக்கூடாது சிங்கம் கூறியது.
முயல் ஒரு கிணற்றை காண்பித்து இதற்கு உள்ளேதான் அவன் பதுங்கி இருக்கிறான் என்று கூறியது. யாரது உள்ளே என்னிடம் மோது என்று கிணற்றில் எட்டிப்பார்த்தது அப்போது அதன் பிம்பம் கிணற்றில் தோன்றியது. அதை பார்த்த சிங்கம் கிணற்றில் குதித்தது. முயல் புத்திசாலித்தனமாக தப்பித்து விட்டது.