ஒரு பெரிய ஆலமரத்தின் இரண்டு காகம் குடும்பமாக பல வருடங்களாக வாழ்ந்து வந்தன. எந்த ஒரு பிரச்சினையும் இன்றி வாழ்ந்தனர். ஒரு நாள் பாம்பு ஒன்று வாழ்வதற்கு இடம் என்று பல இடங்களைத் தேடியும் இடம் கிடைக்காமல் இறுதியாக ஆலமரத்தடியில் ஒரு பந்து ஒன்றை பார்த்து அதனுள் சென்றது. பாம்பு வருவதை கண்ட காகம் பயந்தன. காகத்தின் நண்பர்கள் பாம்பு எப்போதும் அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள். ஒருநாள் இன்றி அது உங்கள் குஞ்சுகளை முழுங்கிவிடும்.ஆகையால் எப்படியாவது அதை துடைத்து விடு என்று அதன் நண்பர்கள் கூறினார்கள்.
பெண்காகம் தன் முட்டைகளை இட்டாள் அதை முழுங்கிவிடும் என்று வருத்தத்தில் அழுதது. சிறிது நாட்கள் கடந்தன. பெண் காகமும் மூன்று முட்டைகளை இட்டது. சிறிது நாட்களுக்குப் பின்பு முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தன. காக்கையின் குஞ்சுகளின் கூச்சல் சத்தம் கேட்டு பாம்பு பொந்திலிருந்து வெளியே வந்து எப்படியாவது உணவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டது.
ஒருநாள் காகம் இரண்டும் உணவு தேடுவதற்காக கூட்டிச் சென்றது. இதுதான் தகுந்த நேரம் என்று பாம்பு மரத்தில் ஏறி 3 குஞ்சுகளையும் உறங்கி விட்டது. காக்கைகள் மீண்டும் வந்து பார்த்தால் அதன் குஞ்சுகள் காணவில்லை. வருத்தப்பட்டனர். ஆண் காகம் பெண் காகத்திடம் வருத்த படாதே நான் எப்படியாவது இந்த பாம்பை துரத்தி விடுகிறேன் என்று கூறி நரியிடம் உதவி கேட்டது. நடந்தது எல்லாம் நரியிடம் கூறியது. நரி ஆற்றில் ராணி அவர்கள் குளிப்பார்கள் அவர்களின் நகை ஒன்றை கொண்டு வந்து பாம்பின் போட்டு விடு என்று கூறியது. நரி கூறியதுபோல காகம் கொண்டு பறந்து வந்து பாம்பின் பொந்தில் நகையை போட்டது.
காவலர்கள் பின்தொடர்ந்து வந்து அந்த பந்தை அடித்து உடைத்து நகை எடுத்தனர். காவலர்கள் உடைக்கும் போது ஒரு அடி பாம்பின் மீது விழுந்ததால் பாம்பு பொந்திலிருந்து அலறி அடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடியது. இனிமேல் இந்த பக்கம் வரவே மாட்டேன் என்று கூறிக்கொண்டே ஓடியது. நகையை காவலர்கள் கொண்டு சென்றனர்.
காக்கை நரி இடம் நன்றி கூறி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.