
பெரிய காட்டில் வயதான சிங்கம் ஒன்று அங்குமிங்குமாக நடந்து வந்தது.அந்த சிங்கத்திற்கு வயதாகிவிட்டதால் விலங்குகளை துரத்தி வேட்டையாட முடியவில்லை.இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருத்தத்துடன் மரத்தடியில் அமர்ந்த சிங்கம். அதன் இருக்கும் இடத்தின் வழியாக நரி ஒன்று வந்தது. சிங்கம் நரியை அழைத்தது. அச்சத்துடனும் தயக்கத்துடனும் சென்றது நரி.
நான் தான் இந்த காட்டிற்கு ராஜா. நீ எனக்கு மந்திரியாக பணிபுரிய வேண்டும் என்று அதை மிரட்டியது. எதுவும் யோசிக்காமல் சரி அரசே நீங்கள் கூறுவதை செய்கிறேன் என்று தலை ஆடியது.
இன்று அதிக அளவில் பசியாக உள்ளது அரசருக்கு நல்ல உணவை கொண்டுவா என்று கூறியது சிங்கம். நரி வருத்தத்துடன் நடந்து வந்தது.வரும் வழியில் ஆற்றின் பக்கத்தில் கழுதை ஒன்று நின்று இருந்ததை பார்த்த நரி இதை ஏமாற்றி அழைத்துச் சென்று விடலாம் என்று திட்டமிட்டது.
கழுதையிடம் சென்ற நரி இந்த காட்டிற்கு ராஜா சிங்கம் அவர்கள் மந்திரி பதவிக்கு ஆட்கள் தேடுகிறாராம் நான் உன்னை மந்திரியாக சேர்த்து விடுகிறேன் வருகிறாயா என்று கேட்டது.கழுதை சிங்கத்திடம் சென்றால் தன் உயிர் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி நரியின் பின்புறத்தில் சென்றது.
சிங்கத்திடம் அழைத்து வந்தது நரி.கழுதை பார்த்த உடனே சிங்கம் பாய்ந்து அதை அடித்துக் கொன்றது. நரி வேடிக்கை பார்த்தது. கழுதையை உண்ணலாம் என்று சென்ற சிங்கத்தை அரசே நீங்கள் குளிக்காமல் அசுத்தமாக உள்ளீர்கள் அதனால் சுத்தமாகி வந்து உண்ணுங்கள் என்று கூறியது நரி.சிங்கமும் நான் அசுத்தமாக தான் உள்ளேன் என்று எண்ணி சரி சுத்தமாகி விட்டு வந்து விடலாம் பின்பு உணவை உண்ணலாம் என்று எண்ணி சென்றது.
குளித்து வந்த பின்பு கருதி இடம் வந்த சிங்கம் பார்த்து அதிக அளவில் கோபமடைந்து மந்திரியாரே என்ன இது கழுதையின் மூளை எங்கே என்று கேட்டது.அரசே மூளை இருந்திருந்தால் உங்களிடம் வந்திருக்கிறேன் என்று கூறி அழைத்து வரும்போது இது வந்து இருக்குமா? என்று கூறியது நரி.
சிங்கமும் சிரித்துக்கொண்டே மூளையைத் தவிர மற்ற பாகத்தை உண்டது. நரி மனதிற்குள்ளே சிரித்தது.காரணம் நான் கடினமாக அழைத்து வந்த உணவை உண்ணாமல் வேடிக்கை பார்ப்பதா! என்று எண்ணியது சிங்கமும் கரடியும் ஏமாற்றியது. இதில் நரிதான் ராஜா,...
கருத்து
· அடுத்தவர்களை என்றும் ஏமாற்றக்கூடாது
· எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் உழைத்துதான் உண்ண வேண்டும்.
· சோம்பேறியாக இருக்க கூடாது.