இது தெரியாம Google AdSense Account உருவாக்காதிங்க! Google AdSense Payment Address Details in Tamil

0

 

இது தெரியாம Google AdSense Account உருவாக்காதிங்க! Google AdSense Payment Address Details in Tamil

YouTube, Blogger, Google Admob and WordPress வழியாக Google AdSense Account உருவாக்கும் பொழுது கடைசியாக Payment Address Details இதில் உங்களுடைய தகவல்களை கொடுப்பீர்கள். இது அனைத்து பிளாட்பார்ம் களுக்கும்  பொதுவானதுஇதில் மூன்று இடத்தில் நீங்கள் செய்யும் தவறினால் உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் கணக்கு பெரிய ஆபத்திற்கு உள்ளாகும். நீங்கள் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் லிருந்து வங்கி கணக்கிற்கு எடுக்கவே முடியாது. ஆகையால் கூகுள் அட்சன்ஸ் கணக்கை உருவாக்கும் போது சரியான தகவல்களைக் கொடுத்தால் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆகையால் எந்த இடத்தில் பிரச்சனை வரும் அதை எப்படி சரி செய்வது என்பதனை தெளிவாக காணலாம்

Google AdSense Payment Address Details ல் சரியான தகவல்கள்

Account Type

இதில் இரண்டு வகைகள் உள்ளன

  • Individual
  • Business

தானாகவே individual லில் இருக்கும். அப்படி இருந்தால் அப்படியே விட்டு விடவும். இல்லை என்றால் individual தேர்ந்தெடுக்க வேண்டும். தனிநபர் ஒருவர் பயன்படுத்தினால் இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்

குறிப்பு: தயவு செய்து business இதை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

Name and Address

Google Adsense - Name

இதில் உங்களுடைய பெயரை கொடுக்கவும். சாதாரணமான பெயரை கொடுக்கக் கூடாது. எப்படி கொடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள Government Documents pancard, driving license, voter ID, passport இதில் உள்ள முதல் பெயரை கொடுக்க வேண்டும். கவர்மெண்ட் டாகுமெண்ட்டில் பெயர் எப்படி உள்ளதோ அப்படியே மாற்றம் இல்லாமல் எந்த ஆப்ஷனில் டைப் செய்ய வேண்டும்

குறிப்பு: பெயர் சாதாரணமாக கொடுக்க வேண்டாம்.

Google Adsense - Address

நீங்கள் இப்பொழுது எந்த இடத்தில் இருக்கிறார்களோ அந்த இடத்துக்குரிய முகவரியை கொடுக்க வேண்டும். காரணம் என்னவென்றால் Google AdSense இருந்து கடிதம் ஒன்று நீங்கள் கொடுத்த முகவரிக்கு வரும். அந்தக் கடிதத்தை நீங்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியை கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நீங்கள் எந்த முகவரி வேண்டுமென்றாலும் கொடுக்கலாம். ஆனால் அந்த கடிதத்தில் உள்ள தகவல்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டும். உதாரணத்திற்கு உங்களுடைய நண்பர்களின் முகவரியை கூட கொடுக்கலாம்அவர்களிடமிருந்து கடிதம் உங்களுக்கு வரும் என்றால் கொடுங்கள். இல்லை என்றால் கொடுக்க வேண்டாம்

குறிப்பு: நீங்கள் இப்பொழுது வசிக்கும் இடத்தின் முகவரியை கொடுக்க வேண்டும்.

Address Line 1

நீங்கள் வசிக்கும் வீட்டின் முழு முகவரியைக் கொடுக்க வேண்டும்.

Address Line 2

உங்களிடம் வேறு ஒரு முகவரி இருந்தால் கொடுக்கலாம். இதை நிரப்ப வேண்டும் என்று அவசியமில்லை. அப்படியே விட்டுவிடுவோம்.

Town/city

உங்களுடைய நகரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

State

உங்களுடைய மாநிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Postcode

உங்கள் அஞ்சல் நிலையத்தில் எண் (pin code)

Phone Number

உங்களிடம் உள்ள தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும்.

Google AdSense Payment Address Details செய்யும் பெரிய தவறுகள்

மூன்று இடத்தில் தவறுகள் நடக்கும்

  • Account Type
  • Name
  • Address

சரியான தகவல்களைக் கொடுத்தால் எதிர் காலத்திலும் சரி எப்போதுமே கூகுள் ஆட்சென்ஸ் இருந்து வங்கி கணக்கிற்கு பணம் வருவதை தவிர்க்க முடியாது

Google Adsense - Account Type

இதில் தயவு செய்து Business என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கக் கூடாது. தொழிற்சாலைகள் மற்றும் குழுவாக பயன்படுத்துபவர்கள்  மட்டுமே இந்த ஆப்ஷனை உபயோகப்படுத்துவார்கள். தனிநபர் பயன்படுத்தக் கூடாது. இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் உங்களிடம் GST Number இருக்க வேண்டும். வங்கி கணக்கை இணைக்கும் போது GST NUMBER கட்டாயமாக கேட்கும். ஒரு முறை இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் அதை மாற்றவே முடியாது. GST Number கொடுத்தால் மட்டுமே வங்கி கணக்கை இணைக்க முடியும். வங்கி கணக்கை இணைத்தால் மட்டுமே கூகுள் அட்சன்ஸ் இருந்து பணம் எடுக்க முடியும்.

குறிப்பு: individual மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்

Google Adsense - Name

உங்களுடைய பெயரை தவறாக கொடுத்தீர்கள் என்றால் Google AdSense Identity Verification லில் தவறு நடக்கும். Identity Verification லில் நீங்கள் அப்லோட் செய்யப்படும் government documents உள்ள முதல் பெயரும் இந்த ஆப்ஷனில் உள்ள பெயரும் பொருத்தமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் நிராகரிக்கப்படும். ஆகையால் பெயரை சரியாக கொடுக்க வேண்டும். மூன்று முறை மட்டும்தான் வாய்ப்புள்ளது.

குறிப்பு: உங்களிடம் உள்ள கவர்மெண்ட் டாக்குமெண்டில் உள்ள முதல் பெயரை எப்படி உள்ளதோ அப்படியே மாற்றமில்லாமல் இந்த ஆக்ஷனில் கொடுக்க வேண்டும்.

Google Adsense - Address

தற்போது நீங்கள் எந்த இடத்தில் வசித்து வருகிறீர்களோ அந்த இடத்தின் முகவரியை கொடுக்க வேண்டும். எதற்காக முகவரி என்றால் நம் நாட்டிற்கு Google AdSense verification இரண்டு வகையாக உள்ளது. Address and pin verification க்கு கூகுள் ஆட்சென்ஸ் இல் இருந்து கடிதம் வரும். சரியான முகவரியை கொடுத்தால் மட்டுமே கடிதம் வீட்டிற்கு வரும். இதில் முகவரியில் மட்டுமே தவறு நடக்கும். அந்த கடிதத்தில் ஆறு எண் கொடுக்கப்பட்டிருக்கும். அதை எடுத்து கூகுள் ஆட்சென்ஸ் சமர்ப்பிக்க வேண்டும். இதுவும் மூன்று வாய்ப்பு மட்டும் தான்

நண்பர்கள் கூறினார்கள் இல்லை யூடிபில் பார்த்தேன் என்று கவர்மெண்ட்  டாகுமெண்ட்டில்  உள்ள முகவரியை கொடுக்கக்கூடாது. நீங்கள் வசிக்கும் முகவரியும் கவர்மெண்ட்  டாக்குமெண்ட் உள்ள முகவரியும் சரியாக இருந்தால் கொடுக்கலாம். தவறாக இருந்தால் கொடுக்கக் கூடாது. எந்த முகவரி வேண்டுமென்றாலும் கொடுக்கலாம் ஆனால் அந்த முகவரிக்கு அனுப்பப்படும் தகவல்கள் உங்களிடம் வந்து சேர வேண்டும்

குறிப்பு: நீங்கள் இருக்கும் இடத்தில் கடிதம் வரக்கூடிய முகவரியை கொடுக்க வேண்டும்

இந்த மூன்று இடத்தில் மட்டுமே தவறுகள் நடக்கும். மேலே கூறப்பட்ட உள்ளதைப் போன்று செய்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது.

கீழே உள்ள வீடியோவில் தெளிவாக காணலாம்.

 


இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை comments மூலமாக பதிவுசெய்யவும். பயனுள்ள தகவலாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!