
ஒரு ஊரின் ஒரு ஏழ்மையான நிலையில் உள்ள ஒரு மனிதர் வாழ்ந்து கொண்டு வந்தார். அவரின் வாழ்க்கையில் அனேக கஷ்டங்களும் அநேக போராட்டங்களும் இருந்தது. அவர் இந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் உதவி செய்யும் மனம் ஒன்றி இருந்தது அவர் வேலை செய்து வரும் வருமானத்தில் ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று செய்துகொண்டு வந்தார். இவ்வாறு தன்னால் இயன்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து கொண்டிருந்தார். இப்படி அவர் வாழ்க்கை ஒவ்வொரு நாளாக நடந்துகொண்டு கடந்து போனது.
இவ்வாறு அவர் உதவி செய்யும் மனம் உடையவராக இருந்தார். ஆனால் அவரின் வாழ்க்கையில் வேதனையும் துன்பமும் காணப்பட்டது. அவருக்கு ஒரு மனைவியும் 2 பிள்ளைகளும் இருந்தனர் அவர்களைக் காப்பாற்றுவதற்கு மிகவும் கடினப்பட்டு ஒவ்வொரு நாளும் கடினமான வேலைகளை செய்து சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்தை நடத்துவதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து முயற்சி செய்து வாழ்ந்து கொண்டிருந்தார். குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சந்தோசம் ஆரம்பித்தது கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். பின்னர் அவர் வேலை செய்யும் இடத்தில் அவர் நன்றாக வேலை செய்வதால் அவருக்கு மாத வருமானத்தை விட கொஞ்சம் பணம் சேர்த்து அவருக்கு கொடுப்பார்கள். அந்த பணம் குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் வாங்குவதற்கு உதவியாக இருந்தது.
இவ்வாறு அவருடையவாழ்க்கையை நடத்திக் கொண்டு போனார். ஒருநாள் தன் குடும்பத்தை கஷ்டத்தை அறிந்து தன் மனைவியிடமும் தன் பிள்ளைகளிடம் நான் வெளியே இடத்திற்கு சென்று அந்த இடத்தில் தங்கி வேலை செய்து பணம் சம்பாதித்து கொண்டு வருகிறேன் என்று தன் பிள்ளைகளிடமும் தன் மனைவியிடமும் சொன்னார். அதற்கு அவர்கள் மறுத்தார்கள் ஆனால் அவர் தயவுசெய்து என்னை போக விடுங்கள் நான் போய் நன்றாக வேலை செய்தால் மட்டுமே நம்ம குடும்பம் முன்னேறும் என்று தன் மனைவியிடமும் குழந்தைகளிடமும் சொன்னார் குழந்தைகள் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் மனைவி குடும்பத்தின் நிலைமையை அறிந்துதன் கணவரிடம் அன்பாக நடந்து கொண்டு பத்திரமாக வேலை செய்து பத்திரமாக திரும்பி வாருங்கள் என்று சொன்னான் கணவர் தன் மனைவியை நேசித்து தன் பிள்ளைகளை நேசித்தேன். நான் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார் அவர் போகிற வழியில் ஒரு பெரியவர் திருடர்களால் பிடிபட்டு இந்த பெரியவர் இடமிருக்கும் பணம் மற்றும் நகைகளை எல்லாவற்றையும் பறித்தது மட்டுமல்லாமல் அவரை நன்றாக அடித்து உதைத்து இறந்து போகும் நிலைக்கு அந்தக் கள்ளர்கள் அவரை அடித்தனர். பின்னர் அந்த பெரியவரை விட்டுவிட்டு கிடைத்த வரைக்கும் லாபம் என்று சொல்லி அவரை விட்டுப் போய்விட்டனர் அதை பார்த்த அந்த மனிதர் அவரிடம் ஓடி மிகவும் அவரிடம் யாராவது இவருக்கு உதவி செய்யுங்கள் என்று எல்லாரிடமும் கேட்டார். எல்லாரும் அவரை பார்த்து பாக்காத மாதிரி சென்றுவிட்டனர் இதை அறிந்த அந்த மனிதர் நான் இந்த பெரியவருக்கு உதவி செய்வேன் என்று முடிவெடுத்து அந்தப் பெரியவரை தன் வீட்டிற்கு கொண்டு சென்றார்.
வீட்டிற்கு வந்தவுடன் தன் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்து நான் சென்று கொண்டிருக்கும் வழியில் இந்தப் பெரியவர் கல்லறைகளில் அகப்பட்டு மிகவும் மோசமான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். நான் இவருக்கு உதவ வேண்டும் என்று இவரின் நமது வீட்டிற்கு கூட்டி கொண்டு வந்தேன் இவருக்கு நாம் உதவி செய்வோம் நம் ஊரில் இருக்கின்ற மருத்துவரை நான் அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி கணவர் போய்விட்டார். கணவர் போய் அந்த மருத்துவரே தன் வீட்டிற்கு அழைத்து அந்த பெரியவருக்கு வைத்தியத்தை பார்க்கும்படி வைத்தியரிடம் அந்த மனிதர் கேட்டுக்கொண்டார். உடனே மருத்துவர் அந்த பெரியவரை பார்த்து ஆறுதல் சொல்லி முதலுதவி செய்து மருந்துகளை போட்டு காயங்களை கட்டினார். பின்னர் மருத்துவர் அந்த மனிதரை கூப்பிட்டு இவர் குணமாக சில நாட்கள் ஆகும் என்று சொல்லிவிட்டு அந்த நாட்களில் இந்த பெரியவருக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று அறிவுரையும் அந்த மனிதரிடம் மருத்துவர் சொல்லிவிட்டு சென்று விட்டார்.
உடனே அந்த மனிதர் அந்த மருத்துவருக்கு நன்றியை சொல்லிவிட்டு பெரியவரிடம் வந்து அவரை கவனித்துக் கொண்டார் பின்னர் நாட்கள் கடந்தது அவரும் குணமானார். பின்னர் அந்த பெரியவர் நீங்கள் யார் என்று விசாரிக்க ஆரம்பித்தார் இவ்வாறு நாங்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பம் என் குடும்பத்தை உயர்த்துவதற்கு நான் உங்களுக்கு வேலை செய்ய வந்து கொண்டிருக்கும். வேலையில் அந்த வழியில் நீங்கள் கள்ளர் கையில் அகப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன் உங்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை எனவே நான் உங்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்து உங்களுக்கு மருத்துவத்தை பார்க்கும்படி என் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தேன் என்று பெரியவருக்கு புரியும்படி அந்த மனிதர் சொன்னார் உடனே அந்த பெரியவர் அந்த மனிதருக்கும் அவரை சேர்ந்து அந்த குடும்பத்திற்கு மிகவும் மனதார நன்றியை சொல்லிவிட்டு அந்த மனிதரை கூப்பிட்டு நான் அந்த ஊரில் மிகவும் பணக்கார உனக்கு என்ன உதவி வேண்டும். என்னிடம் வந்து கேள் என்று சொல்லி அந்தப் பெரியவர் அந்த குடும்பத்திற்கு தேவையான பணத்தை கொடுத்தார் அதை வாங்கி இந்த குடும்பம் தனது வாழ்க்கையை நன்றாக நடத்திக் கொண்டு போனார்கள் அது மட்டுமல்ல அந்தப் பெரியவர் அதே ஊரில் அவருக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுத்தார். அவர் குடும்பத்தின் நிலைமை மாறியது சந்தோஷமும் சமாதானமும் மகிழ்ச்சியும் அவர்கள் வீட்டில் எப்பொழுதும் காணப்பட்டது இதேபோல் வாழ்க்கை சந்தோஷமாக கடந்து கொண்டு போனது.
இக்கதையின் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது நாம் பெரியவர்கள் சிறியவர்கள் என்று பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்வோம். ஆனால் எதிர்பாராதவிதமாக நமக்கே அது ஆசீர்வாதமாக முடியும் என்ற கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். நாம் யாவரும் மற்றவர்களுக்கு உதவிசெய்யும் மனதை ஊழியர்களாக இருக்கவேண்டும் என்று இக்கதையின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்கிறோம்.
நன்றி.