
விடுமுறை காதல் - பவுன் குமார் | காவியா
நாம் காணப்போகும் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இக்காலத்தில் அனைவருமே ஆன்லைனில் தான் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை உபயோகித்து வருகிறோம். இப்படித்தான் ஆன்லைனில் உருவான காதல் கதையை காணப்போகிறோம். நேரில் இருக்கும் காதலியை விட இக்காலத்தில் இருக்கும் ஆண்கள் பெண்கள் காதல் எப்படி செய்கிறார்கள் என்று பார்க்கலாம். நாம் கதையின் நாயகன் 20 வயது வாலிபன். என் வாழ்க்கையில் நடக்கும் காதலில் சுவாரசியங்களை காணலாம். வாருங்கள்,....
கதாநாயகனின் அறிமுகம்
பெயர் - பவுன் குமார்
வயது. - 20
தற்போது கல்லூரியில் படிக்கிறான். தந்தை கிடையாது. பிறந்ததிலிருந்து தந்தையின் முகத்தை பார்த்ததே கிடையாது. இவன் சிறுவயதிலிருந்து பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் வரை இவனுடன் பெண்கள்தான் அதிக அளவில் படித்திருக்கிறார்கள். ஆனால் இவனுக்கு காதல் என்று நினைவு தெரிந்த நாட்களில் இருந்து எந்த ஒரு பெண்ணின் மீதும் சிறிது கூட காதல் வரவில்லை. தன் வாழ்க்கை முழுவதும் அப்பா என்று கூற முடியாமல் போனதே என்று வருத்தப்பட்டாலும் அதிகமானதாகும். இவனுக்கு ஒரு அக்கா இருக்கிறாள். தனக்கு பிடித்தது கிடைக்கும் கிடைக்கும் என ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போகும்போது தான் அவன் ஆசை பாசம் மற்றும் உணர்வுகள் எல்லாம் இல்லாமல் ஒரு பாறை போல மனதை செதுக்கி கொண்டான். கூறப்போனால் இவனுக்கு பாசம் காட்ட ஆட்கள் தேடிய காலமும் உண்டு. அனைவரும் இருந்தும் தனியாக நிற்கிறான். கந்த இல்லாமல் இவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. சிறுவயதில் இருந்து நினைத்தது ஆசைப்பட்டது எதுவுமே கிடைக்காது. நன்றாக படிப்பான். ஆனால் மேலும் இவனைப் படிக்க வைக்க யாரும் கிடையாது. அப்பா ஒருவர் இல்லாத காரணத்தினால் இவன் வாழ்க்கையை வெறுத்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறான். சில நேரங்களில் செத்துவிடலாம் என்று கூட நினைத்தேன் சாகலாம் என்று சென்றுவிட்டு, எனக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்கக் கூடாது. நான் குறை கிடையாது. நான் கூழை கிடையாது.
எனக்கு திருமணமாகும். எனக்கும் குழந்தைகள் பிறக்கும், தந்தை இல்லாத குறையே இல்லாமல் எப்படி வளர்க்க வேண்டும் என்று பல ஆசைகளில் திரும்பி வந்து விடுவேன். தந்தை இல்லாமல் இருக்கும் அப்பா கிடைத்தால் அது நமக்கு கிடைத்த பெரிய வரமாகும். ஏனென்றால் அவருக்கு என்ன என்ன நடந்ததோ அது நம் பிள்ளைக்கு நடக்கக்கூடாது என்று நினைத்து எல்லாமே விலைக்கு வாங்கி தருவார் செய்துவைப்பார்.
இவன் பெண்களிடம் நன்றாக பழகுவான் ஆனால் காதல் வருவதில்லை என்று கூறுவான். காதல் செய்வது அதிக அளவில் பிடிக்கும். ஏனென்றால் காதல் திரைப்படத்தில் வரும் காதல் காட்சிகள் தான் காரணம். அனைவருமே தவறான வழியில் கொண்டு செல்வது திரைப்படம் தான் முக்கிய காரணமாகும். மூட நம்பிக்கை கிடையாது. அதாவது கடவுள் கை கும்பிட்டு வணங்கும் பழக்கம் சுத்தமாக கிடையாது. ஆனால் கோவிலுக்கு செல்வான். ஏனென்றால் அங்கு ஒரு அழகான பெண்களை சைட் அடிப்பதற்காக, பேய் மீது நம்பிக்கையும் கிடையாது. இரவு பன்னிரண்டு மணிவரை பேய் படத்தை பார்ப்பாராம்.
காதலிக்கும் ஆசை அதிக அளவில் இவனுக்கு உள்ளது. இவனைப் பற்றி இதுவே போதுமானதாகும். இவனின் காதலி பற்றி காணலாம் வாருங்கள்.
கதாநாயகி பற்றி சில வார்த்தைகள்
பெயர் - காவியா
வயது. - 16
இவளுக்கு அம்மா சிறுவயதில் இருந்தே கிடையாது. அப்பா ஒரு அண்ணன் மட்டும்தான். தற்போது பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். இவளை பற்றி இதுவே போதுமானதாகும்.
இருவரும் சந்திப்பு
பவன்குமாருக்கு சாதிக்கலாம் என்ற எண்ணம் இருக்கும், ஆனால் அவன் திறமையை எப்படி வெளிப்படுத்துவது என்று சுத்தமாக அவனுக்கு தெரியாது. இவன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் தான் காவியா என்ற பெண்ணை முதலில் சந்திக்கிறான். கல்லூரியில் அனைத்து பாடங்களிலும் போதுமான மதிப்பெண்களை எடுத்துள்ளான். கல்லூரி ஏப்ரல் மாதத்தில் முடிந்தது. பொழுதுபோக்கிற்காக பேஸ்புக்கில் வருவது வழக்கம். இவனுக்கு ஆண்களிடமிருந்து பேசி பேசி கடுப்பாகி விட்டதால், இவளுக்கு friend request கொடுத்தான். பின்பு அவளிடம் இருந்து accept ஆகிவிட்டது. ஆனால் இவன் மெசேஜ் செய்தால் ரிப்ளை கிடையாது. அவள் பார்ப்பாள். ரீப்ளே அனுப்பியது கிடையாது. இவனும் என்னென்னமோ செய்து பல மெசேஜ்களை அனுப்பி இவளை கட்டாயமாக ரிப்ளை செய்துவிட்டான். சிறிது சிறிதாக இவளை பற்றி அவள் கேட்கவும் அவளைப் பற்றி இவன் கேட்கவும் இப்படியே சிறிது நாட்கள் நன்றாக தெரிந்து கொண்டனர்.
பின்பு இவன் புகைப்படத்தை அனுப்பினான். அவளும் இவனுக்கு புகைப்படத்தை அனுப்பினாள் காரணம் பவுன் குமார் கொஞ்சம் பார்ப்பதற்கு சிறிது அழகாக இருப்பான் அதனால் தான். அழகாக இல்லை என்றால் பெண்கள் ரிப்ளை செய்வதே கடினம். இதையும் மீறி செய்தார்கள் என்றால் போட்டோ அனுப்பவே மாட்டார்கள்.
புகைப்படத்திலிருந்து தொலைபேசி எண் இவன் கேட்டான். அவளும் தந்தாள், இது நடந்தது எல்லாம் காவியாவின் பத்தாம் வகுப்பு முடிந்த பின் வரும் விடுமுறையில். சிறிது சிறிதாக கடலை போட ஆரம்பித்தனர். இது தொடர்ந்து ஒரு மணி நேரம் ஆனது இரவு 12 மணிவரை அளவில் இரண்டு மணி நேரம் தொல்லை கொடுக்கும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தனர்.
கூறப்போனால் இவர்கள் கூறியது,
நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன்,,......
என்னை விட்டுப் போய் விடாதே,......
இதைப்போன்று பாசமாகவும் பேசுவார்கள். பொன் குமார் தன் நண்பர்களுடன் பாண்டிச்சேரி செல்ல போகிறேன். அவர்களுடன் மதுபானம் அருந்த போகிறேன் அதற்கு இவரிடம் அனுமதி கேட்டான். என் காதல் எல்லை மீறிவிட்டது. சரி அவளும் ஒருநாள் மட்டும் தானே சரி போய் வாடா என்று கூறினார். ஆனால் இவன் சொன்னது அனைத்துமே பொய்யாகும். இவள் இப்படி கூறினால் என்ன சொல்கிறாள் என்று பார்ப்பதற்காக மட்டும்தான் இவன் இப்படி கூறினான். ஆனால் பாண்டிச்சேரிக்கு போனது உண்மை அவர்கள் நண்பர்கள் மதுபானம் அருந்தினால் தான் ஆனால் இவன் அருந்தவில்லை காரணம் காவியா.
இப்படியே நாட்கள் கடந்தது. ஒரு நாள் மீண்டும் பாண்டிச்சேரிக்கு போகப்போகிறேன் மீண்டும் அனுமதி கேட்டான். இவளும் ஒரு நாள் தானே என்று கூறி விட்டாள். ஆனால் காவிய மனதில் தவறான எண்ணம் எழும்பிவிட்டது. இவன் இப்பவே இப்படி செய்கிறான். இவனை திருமணம் செய்தால் அவ்வளவுதான் என்று. ஆனால் பொன்குமார் கூறியது அனைத்தும் பொய் என்று அவளுக்கு சிறிதும் தெரியாது.
பின்பு காவியாவும் நாளை பள்ளி திறக்கப் போறாங்க
I love you da,....
I miss you da,...
நீ இல்லாம நான் இல்லை
இப்படி எல்லாம் கூறிவிட்டு சென்றவள், மறுநாள் பள்ளி முடிந்து இவர் கூறியது,..
காதல் வேண்டாம்
நாம் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறினாள். சரி இவள் படிக்கிறாள் disturb பண்ணக் கூடாது என்று யோசித்து சரி என்று கூறினான்.
லவ் பண்ண மாட்டாங்களாம் ஆனால் ஒரு மணி நேரம் வரை செல்போனில் பேசு வாங்கலாம். என்ன ஞாயம்???
பின்பு இவர்களிடமிருந்து சிறிது சிறிதாக சண்டை வர ஆரம்பித்து விட்டது. காரணம் பேசவேண்டியது எல்லாமே அந்த ஒரு மாதத்திலேயே பேசிவிட்டார்கள். இப்போது பேச வார்த்தைகள் கிடையாது. சிறிது சிறிதாக தோன்றிய பிரச்சினைகள் காவியா அவன் குமாரை WhatsApp யில் block செய்யும் அளவில் போனது. சரி இவளை டிஸ்டர்ப் பண்ண கூடாது என்ற இவனின் நல்ல மனதிற்காக அவளின் என்னை டெலிட் செய்துவிட்டான்.
1. இதிலிருந்து என்ன தெரியவருகிறது. இவர்கள் செய்தது காதலா???
2. இது ஆன்லைனில் மட்டுமில்லாமல் நேரிலும் இப்படித்தான் நடக்கிறது
3. இதன் பெயர் காதல் கிடையாது. இதன் பெயர் இந்த வயதில் வருவது எல்லாமே காதல் கிடையாது. நான் கூறுகிறேன் என்று தெரிந்தவர்களுக்கு அடுத்து என்ன கூறப் போகிறேன் என்றும் அதன் பெயர்,...... உங்களுக்குத் தெரியும்.