நீங்கள் பயன்படுத்தும் WordPress website க்கு Google AdSense ல் எப்படி சரியாக உங்களுடைய தொலைபேசியில் இணைப்பது என்பதனை தெளிவாக காணலாம்.
நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரை ஓபன் செய்து கூகுளில் Google AdSense என டைப் செய்து தேடவும். தேடலில் வரும் முதல் வலைதளத்தை ஓபன் செய்யவும்.
கூகுள் ஆக்சன்ஸ் இன் ஆபீஷியல் ஹோம் பேஜ் காண்பிக்க பட்டிருக்கும். நாம் புதிதாக ஒரு கணக்கை உருவாக்கப் போகிறோம் அதனால் Get Started ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
Google AdSense Signup Page open ஆகியிருக்கும். உங்களுடைய சரியான தகவல்களை கொடுக்க வேண்டும்.
Your Website
உங்களுடைய WordPress வெப்சைட்டை இதில் டைப் செய்யவும்.
Your email Address
இதை கிளிக் செய்தால் உங்களுடைய மின்னஞ்சல் கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Get helpful AdSense info at that email address
- Yes, send me customized help and performance suggestions
- No, don't send me customized help and performance suggestions
இதில் முதல் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்பு கீழே உள்ள Save and Continueஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Select your country or territory
மறுபக்கத்தில் இந்த ஆப்ஷனில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Please review and accept our Terms and Conditions
இதில் கூகுள் ஆட்சென்ஸ் இல் Terms and Conditions பற்றிய முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். படித்து பார்க்கவும்.
படித்துப் பார்த்த பின்பு கீழ் புறத்தில் சிறிய கட்டம் (Yes, I have read and accept the agreement) ஒன்று இருக்கும் அதை தேர்ந்தெடுத்து create account ஐ கிளிக் செய்யவும்.
Payment Address Details
பெரும்பாலும் அனைவருமே இதில் மட்டுமே தவறுகள் செய்வார்கள். இதில் சரியான தகவல்களை கொடுத்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது.
Customer Info
Account Type
இதில் இரண்டு வகை கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் தனிநபராக கூகுள் ஆட்சென்ஸ் கணக்கைத் பயன்படுத்தி கொண்டிருந்தாள் individual ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் குழுவாக கூகுள் ஆட்சென்ஸ் கணக்கை பயன்படுத்தி இருந்தால் business ஐ தேன் எடுக்க வேண்டும். அனைவருமே அவர்களுக்கு என்று ஒரு தனி கணக்கினை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆகையால் individual மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். தவறிக்கூட business ஐ ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
Name and Address
Name
இதில் உங்களுடைய பெயரை கொடுக்க வேண்டும். சாதாரணமாக கொடுக்கக்கூடாது. எப்படி கொடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள Government Documents லில் உள்ள முதல் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Address Line 1
இதில் நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியை கொடுக்க வேண்டும். பிழையில்லாமல் கொடுக்கவும். ஊர், அஞ்சல், வட்டம் என அனைத்தும் இதில் கொடுக்கவும்.
Address Line 2
இதில் நிரப்ப வேண்டிய அவசியமில்லை.
City
உங்களுடைய நகரத்தை தேர்ந்தெடுக்கவும்.
Postal Code (Pin Code)
உங்களுடைய அஞ்சல் நிலையத்தில் Pin Code கொடுக்கவும்.
State
உங்களுடைய மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்.
Phone Number
நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை கொடுக்கவும்.
Payment Address Details லில் சரியான தகவல்களை கொடுத்த பின்பு Submit செய்யவும்.
Submit செய்தபின்பு மறுபக்கத்தில் கூகுள் அட்சன்ஸ் கோட் கொடுக்கப்பட்டிருக்கும். அதை காபி செய்து கொள்ளவும்.
உங்களுடைய WordPress website ஐ ஓபன் செய்து appearance ஐ தேர்ந்தெடுத்து theme editor கிளிக் செய்யவும். ஒவ்வொரு theme க்கும் head மாறுபடும். Ctrl - f என்டர் செய்து <head> தேடவும். பின்பு head கீழே AdSense code சரியாக கொடுக்கவும்.
மீண்டும் கூகுள் ஆட்சென்ஸ் பக்கத்திற்கு வந்து நீங்கள் காப்பி செய்த கோடுக்கு கீழ் புறத்தில் உள்ள சிறிய பாப்ஸ் செய்து done கொடுக்கவும்.
Your Site is unreachable பக்கத்தில் கீழே இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் continue without checking தேர்ந்தெடுக்கவும். மறுபக்கத்தில் yes continue கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுடைய WordPress website review ற்கு போகும்.
மீண்டும் உங்களுடைய வலைத்தளத்தை இணைக்க வேண்டும். செட்டிங்ஸ் ஐ கிளிக் செய்து மூன்றாவது ஆப்ஷன் sites தேர்ந்தெடுக்கவும். இதில் add site கிளிக் செய்து உங்களுடைய வலைத்தளத்தின் லிங்கை கொடுத்து save and continueதேர்ந்தெடுக்கவும்.
மறுபக்கத்தில் connect your site to AdSense ல் AdSense code இருக்கும். ஏற்கனவே கூகுள் ஆட்சென்ஸ் கோட் head யிள் கொடுக்கப் பட்டதால் மீண்டும் கொடுக்க வேண்டாம். Request Review தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது உங்களுடைய வலைத்தளம் review க்கு சரியாக உள்ளது. 24 மணி நேரம் முதல் இரண்டு வாரம் வரை உங்களுடைய வலைதளத்தின் அப்ரூவல் பற்றிய தகவல்கள் உங்களுடைய மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். கீழே உள்ள வீடியோவில் தெளிவாக காணலாம்.