நீங்கள் பயன்படுத்தும் வலைதள செயலியை முதலில் ஓபன் செய்யவும். அதில் உங்களுடைய மின்னஞ்சலை லாகின் செய்து கொள்ள வேண்டும். பின்பு கூகுளில் Admob என டைப் செய்து தேட வேண்டும். தேடலில் முதலில் வரக்கூடிய வலைத் தளத்தை ஓபன் செய்யவும்.
மறுபக்கத்தில் Google Admob signup செய்வதற்கான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
Google Admob - Country
Select Country ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் அனைத்து நாடுகளும் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக India
Google Admob - Time Zone
உங்களுடைய நாட்டின் நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக Kolkata
Google Admob - Billing Currency
இதில் அனைத்து நாடுகளின் பண மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் கூகுள் ஆட்சென்ஸ் கணக்கில் நமக்கு வரும் பணம் டாலராக மட்டும் தான் வருகிறது. ஆகையால் us dollar ஐ தேர்ந்தெடுக்கவும்.
சரியான தகவல்களை தேர்ந்தெடுத்த பின்பு கீழே நீல நிறத்தில் create Admob Account ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆப்ஷன் களுக்கும் yes ஒன்றினை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். எஸ் கொடுப்பதால் எந்த ஒரு பிரச்சினையும் வராது. அதை நீங்கள் சிறிது படித்தாலே போதும் என்ன கொடுத்து இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.
பின்பு உங்களுக்கு என்று ஒரு புதிய Google Admob Account வெற்றிகரமாக உருவாகியிருக்கும். இதில் payment Address Details லில் உங்களுடைய தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். எப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்றால் மேல்புறத்தில் மூன்று புள்ளிகள் கொண்ட செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். சிறிது கீழே தள்ளினாள் payment ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் setup payment details என்ற ஆப்ஷன் இருக்கும் அதை தேர்ந்தெடுத்து உங்களுடைய தகவல்களை கொடுக்க வேண்டும். ஒரு சில பேருக்கு இந்த பக்கம் சரியாக ஆகாது. ஆகையால் அவர்கள் நேரடியாக கூகுள் அட்சன்ஸ் இல் sign-in செய்து கொள்ளவும்.
Google admob payment Address Details
Account Type
இதில் இரண்டு வகைகள் உள்ளன.
- Individual
- Business
Name
இதில் உங்களுடைய பெயரை கொடுக்கவும். சாதாரணமான பெயரை கொடுக்கக் கூடாது. எப்படி கொடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள Government Documents pancard, driving license, voter ID, passport இதில் உள்ள முதல் பெயரை கொடுக்க வேண்டும். கவர்மெண்ட் டாகுமெண்ட்டில் பெயர் எப்படி உள்ளதோ அப்படியே மாற்றம் இல்லாமல் எந்த ஆப்ஷனில் டைப் செய்ய வேண்டும்.
குறிப்பு: பெயர் சாதாரணமாக கொடுக்க வேண்டாம்.
Address
நீங்கள் இப்பொழுது எந்த இடத்தில் இருக்கிறார்களோ அந்த இடத்துக்குரிய முகவரியை கொடுக்க வேண்டும். காரணம் என்னவென்றால் Google AdSense இருந்து கடிதம் ஒன்று நீங்கள் கொடுத்த முகவரிக்கு வரும். அந்தக் கடிதத்தை நீங்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியை கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நீங்கள் எந்த முகவரி வேண்டுமென்றாலும் கொடுக்கலாம். ஆனால் அந்த கடிதத்தில் உள்ள தகவல்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டும். உதாரணத்திற்கு உங்களுடைய நண்பர்களின் முகவரியை கூட கொடுக்கலாம். அவர்களிடமிருந்து கடிதம் உங்களுக்கு வரும் என்றால் கொடுங்கள். இல்லை என்றால் கொடுக்க வேண்டாம்.
குறிப்பு: நீங்கள் இப்பொழுது வசிக்கும் இடத்தின் முகவரியை கொடுக்க வேண்டும்.
Address Line 1
நீங்கள் வசிக்கும் வீட்டின் முழு முகவரியைக் கொடுக்க வேண்டும்.
Address Line 2
உங்களிடம் வேறு ஒரு முகவரி இருந்தால் கொடுக்கலாம். இதை நிரப்ப வேண்டும் என்று அவசியமில்லை. அப்படியே விட்டுவிடுவோம்.
Town/city
உங்களுடைய நகரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
State
உங்களுடைய மாநிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Postcode
உங்கள் அஞ்சல் நிலையத்தில் எண் (pin code)
Phone Number
உங்களிடம் உள்ள தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும்.
கீழே உள்ள வீடியோவில் தெளிவாக காணலாம்.
இதை பற்றிய உங்களுடைய கருத்துக்கள் கமெண்ட்ஸ் மூலமாக வரவேற்கப்படுகிறது.