How to Get Google Adsense Approval in 2 Hours

0

 


உங்களுக்கு கூகிள் ஆட்சென்ஸ் இல் கணக்கு இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். எளிமையாக இரண்டு மணி நேரத்தில் உங்களுக்கு என்று புதிதாக கூகுள் ஆட்சென்ஸ் கணக்கினை உருவாக்கலாம். இதற்கு எந்த ஒரு தகுதியும் தேவையில்லை. பெயர், முகவரி, தொலைபேசி எண் இதை வைத்து எளிமையாக Google AdSense Dashboard வாங்கலாம். இது இரண்டு நபர்களுக்கு பயன்படும். புதிதாக கணக்கு உருவாக்கவர்களுக்கும், ஏற்கனவே பிரச்சனை இருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரு நபர்களுக்குமே தனித்தனியாக தெளிவாக எப்படி உருவாக்குவது என்பதனை காணலாம்.

நீங்கள் பயன்படுத்தி வரும் Google Platform (YouTube, Blogger, WordPress) இவற்றில் Google AdSense Approval வாங்குவதற்கு கட்டாயமாக தகுதி இருக்க வேண்டும். Approval கிடைத்தால் மட்டுமே உங்களுக்கு என்று Google AdSense Dashboard கிடைக்கும். ஆனால் நமக்கு எந்த ஒரு தகுதியும் என்றே முதலில் ஒரு கணக்கினை எளிமையாக உருவாக்கலாம். அதற்கு மிகச்சிறந்த Platform Google Admob ஆகும். admob என்பது புதிதாக செயலி ஒன்றை உருவாக்கி அதில் ads மூலமாக சம்பாதிக்கப்படும் platform ஆகும். நமக்கு ஆதரவாக உள்ள வசதி என்னவென்றால் புதிதாக கணக்கை உருவாக்கி பின்புதான் செயலிக்கு தேவையான ads உருவாக்க முடியும். இப்பொழுதும் சரி எதிர்காலத்திலும் சரி admob ல் கணக்கு வைத்திருப்பதால் எந்த ஒரு பிரச்சினையும் வராது. வேண்டுமென்றால் பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லை என்றால் அப்படியே விட்டு விடலாம். இதில் புதிதாக ஒரு கணக்கை எப்படி உருவாக்குவது என்பதனை தெளிவாக காணலாம்.

Create Google Admob Account

முதலில் நீங்கள் வலைதளத்திற்கு பயன்படுத்தும்  செயலியை ஓபன் செய்யவும். அதில் நீங்கள் எந்த மின்னஞ்சலுக்கு கூகுள் ஆட்சென்ஸ் கணக்கு உருவாக்க வேண்டுமோ அந்த மின்னஞ்சலை லாகின் செய்து கொள்ள வேண்டும். கூகுளில் Admob என்ன டைப் செய்து தேடவும். தேடலில் முதலே வரக்கூடிய லிங்க் ஓபன் செய்யவும்

மறுபக்கத்தில் Admob Signup Page ஓபன் ஆகும். இதில் ஒரு சில தகவல்களை கொடுக்க வேண்டும்.

 

Country or Territory

அனைத்து நாடுகளும் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும் இதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக India

Time Zone

அனைத்து நாட்டிற்குரிய நேரம் மண்டலம் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த நாட்டின் நேர மண்டலத்தை (Time Zone) கொடுக்க வேண்டும். உதாரணமாக, (GMT+5:30) Kolkata

Billing Currency

உங்களுடைய நாட்டின் நாணய குறியீடு தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவிற்கு நேரடியாக Google AdSense ல் ரூபாயாக வராது. ஆகையால் முதலில் உள்ள ஆப்ஷனை (USD Dollar) தேர்ந்தெடுக்க வேண்டும்.

கீழ்ப்புறத்தில் உள்ள Create Admob Account ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆப்ஷன் களுக்கும் yes ஒன்றினை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். எஸ் கொடுப்பதால் எந்த ஒரு பிரச்சினையும் வராது. அதை நீங்கள் சிறிது படித்தாலே போதும் என்ன கொடுத்து இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்

பின்பு உங்களுக்கு என்று ஒரு புதிய Google Admob Account வெற்றிகரமாக உருவாகியிருக்கும். இதில் payment Address Details லில் உங்களுடைய தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். எப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்றால் மேல்புறத்தில் மூன்று புள்ளிகள் கொண்ட செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். சிறிது கீழே தள்ளினாள் payment ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் setup payment details என்ற ஆப்ஷன் இருக்கும் அதை தேர்ந்தெடுத்து உங்களுடைய தகவல்களை கொடுக்க வேண்டும். ஒரு சில பேருக்கு இந்த பக்கம் சரியாக ஆகாது. ஆகையால் அவர்கள் நேரடியாக கூகுள் அட்சன்ஸ் இல் sign-in செய்து கொள்ளவும்.

மறுபக்கத்தில் உங்களுடைய தகவல்களை கொடுக்க வேண்டும்.

Payment Address Details

 

இதை நிரப்புவது எப்படி என்பதனை சரியாக கவனிக்க வேண்டும். காரணம் என்னவென்றால் இதில் மட்டும்தான் உங்களுக்கு பிரச்சனை வரும். சரியான தகவல்களைக் கொடுத்தால் எந்த ஒரு பிரச்சினையும் எப்பொழுதும் வராது. இதை எப்படி நிரப்ப வேண்டும் இதனால் என்ன பிரச்சினை வரும் என்பதனை கீழே உள்ள வீடியோவில் தெளிவாக காணலாம்.

 

புதிதாக ஒரு கணக்கை  உருவாக்குகிறீர்கள் என்றால் உங்களுடைய தகவல்களை அப்படியே கொடுக்க வேண்டும்.

Name and Address

Name

கவர்மெண்ட் டாகுமெண்ட்டில் பெயர் எப்படி உள்ளதோ அப்படியே மாற்றம் இல்லாமல் எந்த ஆப்ஷனில் டைப் செய்ய வேண்டும்

குறிப்பு: பெயர் சாதாரணமாக கொடுக்க வேண்டாம்.

Address Line 1

நீங்கள் வசிக்கும் வீட்டின் முழு முகவரியைக் கொடுக்க வேண்டும்.

Address Line 2

உங்களிடம் வேறு ஒரு முகவரி இருந்தால் கொடுக்கலாம். இதை நிரப்ப வேண்டும் என்று அவசியமில்லை. அப்படியே விட்டுவிடுவோம்.

Town/city

உங்களுடைய நகரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

State

உங்களுடைய மாநிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Postcode

உங்கள் அஞ்சல் நிலையத்தில் எண் (pin code)

Phone Number

உங்களிடம் உள்ள தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே பிரச்சினை உள்ளவர்களுக்கு!

இதில் என்ன பிரச்சினை வரும் என்றால் you have an already AdSense account இந்த பிரச்சனை வரும். இந்தப் பிரச்சினை வர காரணம் என்னவென்றால் நீங்கள் கூகுள் அட்சன்ஸ் கணக்கை உருவாக்கும் பொழுது ஏற்கனவே கொடுத்த தகவல்களை வைத்து புதிதாக ஒரு கூகுள் அட்சன்ஸ் கணக்கை உருவாக்கும் பொழுது இந்தப் பிரச்சினை உங்களுக்கு வரும். பழைய தகவல்களை வைத்து புதிதாக கூகுளே அட்சன்ஸ் கணக்கை உருவாக்க கூடாது. அப்படி உருவாக்கினால் நீங்கள் எத்தனை மின்னஞ்சலில் உருவாக்குகிறீர்கலோ அத்தனை மின் அஞ்சலுக்கு இந்த பிரச்சனை தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். ஆகையால் இதை பின்பற்றினால் எளிமையாக பிரச்சினையை தீர்வு காணலாம்.

  •  You have an already AdSense account பிரச்சினை வந்த மின்அஞ்சல் லாகின் செய்த தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம். புதிதாக ஒரு தொலைபேசியை எடுத்து கொள்ளவும்.
  • பழைய தகவல்களை சிறிதுகூட பயன்படுத்தக் கூடாது. புதிய தகவல்களை எடுத்துக் கொள்ளவும்.
  • புதிதாக ஒரு மின்னஞ்சலை புதிதான ஒரு போன் நம்பர் வைத்து உருவாக்க வேண்டும்.
  • உங்களுடைய country server மாற்றி கொள்ள வேண்டும். மற்ற நாடுகளின் country server மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடைசியாக உள்ள வீடியோவில் ஒரு செயலி பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த செயலியை பயன்படுத்தி கொள்ளவும்.

Name: எப்படி கொடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள கவர்மெண்ட் டாக்குமெண்ட் (passport, driving license, voter ID, pancard) முதலில் எடுத்துக் கொள்ளவும். ஏற்கனவே கூகுள் ஆட்சென்ஸ் கணக்கை உருவாக்கும் பொழுது கொடுக்காத பெயரை இருக்கிறதா என்பதனை கவனித்து தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இதில் ஏற்கனவே கவர்மெண்ட் டாகுமெண்ட்டில் பயன்படுத்தாத பெயரை பயன்படுத்த வேண்டும்.

Address: புதிதான முகவரியை கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுடைய நண்பர்களின் முகவரியை கூட கொடுக்கலாம். ஆனால் அவர்களின் வீட்டிற்கு வரும் கடிதம் உங்களிடம் கொடுப்பார்கள் என்றால் அவர்களுடைய முகவரியை கொடுக்கலாம். இல்லையென்றால் முகவரியில் சிறிது மாற்றம் செய்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு

Number - No

Street - St

Kovil - koil

Taluka - Tk

இதுபோல மாற்றம் செய்து முகவரியை கொடுக்க வேண்டும்.

submit செய்த பின்பு உங்களுடைய மின் அஞ்சலுக்கு இரண்டு மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு Google Admob இருந்து மின்னஞ்சல் வரும். வெற்றிகரமாக உங்களுக்கு என்று ஒரு கணக்கினை உருவாக்கி உள்ளீர்கள் என்று மின்னஞ்சல் அனுப்பப்படும். உங்களுக்கு என்று ஒரு Google AdSense Dashboard கிடைத்துவிடும். இப்பொழுது நீங்கள் பயன்படுத்தும் platform (YouTube, Blogger, WordPress) இணைத்துக் கொள்ளலாம். இந்த வழியை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு என்று எத்தனை மின் அஞ்சலுக்கு Google AdSense Dashboard வேண்டுமோ அத்தனை மின்னஞ்சலுக்கும் இரண்டு மணி நேரத்தில் வெற்றிகரமாக கிடைத்துவிடும். கீழே உள்ள வீடியோவில் இதைப்பற்றி தெளிவாக பார்க்கலாம்.

 


இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் கமெண்ட்ஸ் மூலமாக வரவேற்கப்படுகிறது. பயனுள்ள தகவலாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!