ஒரு ஊரில் ராமு சோமு என்று இரு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் வெவ்வேறு ஜாதி சேர்ந்தவர்கள் எனினும் அவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருந்தது. எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள். எது கிடைத்தாலும் ஒன்றாகத்தான் பகிர்வார்கள். ஒருவர் இல்லையென்றால் இன்னொருவர் இல்லை என்பதுபோல் இருவரும் மிகவும் நெருக்கமாகவும் அன்பும் அரவணைப்பும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் நட்பை கண்டு ஊரே பொறாமைப்படும் அதுபோல் இருந்தது அவர்களின் நட்பு. ஆனால் சோமு கொஞ்சம் சுயநலவாதி ராமுவைப் போல் கிடையாது.
ஒரு நாள் இருவரும் வேட்டையாட காட்டிற்கு சென்றார்கள். முயல் ஏதேனும் கிடைத்தால் அதை உண்ணலாம் என்ற எண்ணத்தில் இருவரும் சென்றார்கள். அப்போது கரடி ஒன்று வந்தது சோமுவுக்கு மரம் ஏற தெரியும். அவன் விரைந்து ஒரு மரத்தில் ஏரி அமர்ந்தான். ராமுக்கு மரம் ஏறத் தெரியாது சற்றுநேரம் சிந்தித்தான் வேறு வழி ஏதேனும் இருக்குமோ என்று எண்ணினார். கரடி மிகவும் வேகமாக அவனை நெருங்கியது ராமுக்கு மிகவும் அச்சம் ஏற்பட்டது. அவனுக்கு சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது காட்டில் இருக்கும் விலங்குகள் செத்துப்போன மனிதர்களை உண்ணாது என்று சோமு நினைத்தான்.
கரடி வருவதற்கு முன் செத்துப்போன போல் படித்து மூச்சை விடாமல் கை கால் அசையாமல் படுத்துக்கொண்டான். கரடி அவன் அருகில் வந்து பார்த்தது. அவனுக்கு மூச்சு பேச்சு எதுவும் இல்லை என்று நினைத்துவிட்டு கரடி சென்றுவிட்டது. அப்போது ராமு எழுந்து கரடி சென்று விட்டது என்று பார்த்தான். கரடி வெகுதொலைவில் போய்விட்டது. ராமு தப்பித்து விட்டேன் என்று மகிழ்ச்சியுடன் இருந்தான்.
சோமு மரத்தில் இருந்து கீழே இறங்கி ராமுவிடம் வந்தான். உனக்கு எதுவும் ஆக இல்லையா என்று ராமுவிடம் சோமு கேட்டான். அப்போது ராமு இல்லை என்று சொன்னான். சோமு கரடி கிட்டே வந்து உன்னிடம் என்ன கூறியது என்று ராமுவிடம் கேட்டான். அதற்கு ராமு ஆபத்தில் உதவாத நண்பர்களிடம் நட்பு வைத்து கொள்ளாதே என்று கரடி என்னிடம் கூறியதாக சோமுவிடம் ராமு கூறினான். அப்போது சோமு என்னை மன்னித்து விடு நண்பா நான் ஏதோ அச்சத்தில் செய்துவிட்டேன் என்று ராமுவிடம் மன்னிப்பு கேட்டான். ராமுவும் சோமுவை மன்னித்து ஏற்றுக்கொண்டான். அப்போது ஒரு சிறுத்தை ஒன்று வந்தது சிறுத்தைக்கு மரம் ஏற தெரியும் பக்கத்தில் ஆறு ஒன்று இருந்தது அந்த ஆற்றை கடந்துவிட்டால் சிறுத்தை இடம் இருந்து தப்பித்து விடலாம். சோமுவுக்கு நீச்சல் தெரியாது ராமுக்கு மட்டுமே நீச்சல் அடிக்க தெரியும். சோமு தன்னை காப்பாற்றாமல் விட்டாலும் ராமு சோமுவை தன் முதுகில் சுமந்து கொண்டு ஆற்றின் அப்புறம் அழைத்துச் சென்று சோமுவை ராமு காப்பாற்றினான். அப்போது சோமு மிகவும் வருந்தினான் நான் அவனை காப்பாற்ற வில்லை இருப்பினும் அவன் என்னை காப்பாற்றி தனது நட்பு உண்மை என்று நிரூபித்து காட்டினான். சோமு தலைகுனிந்து தனது நட்பிற்கு மன்னிப்பு வினாவினான். ராமு சோமுவை ஏற்று தனது முழு நண்பனாக ஏற்றுக்கொண்டான்.