ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர் அனைத்தையும் கற்றவர். அவரை ஒரு ஊரில் பிரசங்கம் செய்ய கூப்பிட்டார்கள். அந்த ஊரில் பத்தாயிரம் பேர் வருவாங்க என்று சொன்னார்கள். அவரை அழைத்துவர ஒரு குதிரையும் குதிரைக்காரன் ஐயும் அனுப்பிவைத்தார்கள். அன்றைக்கும் பார்த்து ஊரில் அதிக மழை இடி மின்னல் அதிக காற்று வீசியது. கூட்டம் எல்லாம் கலைந்து போனார்கள். குரு வந்தபோது மக்கள் யாரும் அங்கு இல்லை. பேசுவதற்காக நிறைய எழுதி வைத்திருந்த அந்த குருவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது இருக்கிற ஒரு குதிரை காரனுக்கு பிரசங்கம் சொல்ல மனம் வரவில்லை.
அந்த குரு குதிரை காரனிடம் என்னப்பா பண்ணலாம் என்று வினவினார். அதற்கு குதிரைக்காரன் ஐயா நான் சாதாரண குதிரை ஓட்டுபவர் என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்றது என்று குருவிடம் சொன்னான். ஐயா எனக்கு ஒரு யோசனை இருக்கிறது என்று குருவிடம் சொன்னான். நான் 30 குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்க போறப்ப எல்லா குதிரையும் வெளியே போயி அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும் தான் இருக்குதுன்னு வச்சுக்கோங்க. தான் அந்த ஒரு குதிரைக்கு மட்டும் புல் வச்சிட்டு தாங்க திரும்பவும் நான்.
பட்டுனு அடிச்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்த குதிரை காரனுக்கு ஒரு சபாஷ் போட்டு விட்டு அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை சொல்ல ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் சரமாரியா போட்டு தாக்கி பிரசங்கத்தை படித்து முடித்து விட்டார் குரு. பிரசங்கத்தை படித்து முடித்து விட்டேன் எப்படி இருந்தது என் பேச்சு ஏதேனும் தவறு இருந்ததா என்று குதிரை காரனிடம் கேட்டார் குரு.
ஐயா நான் குதிரைக்காரன் எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க . ஆனால் ஒண்ணே ஒண்ணு தெரியுங்க. ஐயா நான் அந்த ஒரே ஒரு குதிரைக்கு மட்டும்தான் புல் வைப்பேன் ஆனால் அந்த முப்பது குதிரைக்கு வைத்திருந்த புள்ளை ஒரே ஒரு குதிரைக்கு மட்டும் வைத்து விட மாட்டேன் என்று குதிரைக்காரன் குருவிடம் சொன்னான். குரு ஆடு விட்டார். ஒரு குதிரை மெய்ப் பணியிடம் இவ்வளவு அறிவு இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டார்!
குதிரைக்காரன் என்னதான் குதிரை மேய்த்து வந்தாலும் அவனிடம் குதிரை மெய் பதற்கான அறிவு இருக்கிறது. ஆனால் குருவுக்கு பிரசங்கம் தெரிந்திருந்தும் அதை மற்றவர்களிடம் கூறுவதற்கான அறிவு குருவிடம் இல்லை எனவே குதிரைக்காரன் குருவை விட சிறந்தவனாக விளங்கினார்.
குரு யோசித்தார் நம் எவ்வளவு கற்று வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை எதை கற்று வைத்திருக்கும் என்பதே முக்கியம். மக்களுக்கு எது தேவையோ எது புரியுமோ அவர்கள் வாழ்க்கைக்கு எது பயன்படுமா எது முக்கியமா அதுவே சொல்லித் தரவேண்டும். அதை விட்டுவிட்டு மக்களுக்கு புரியாத அதையும் தேவைப்படாத அதையும் சொல்லி எந்த விதத்துலயும் புண்ணியம் இல்லை. எனவே இந்த இடத்தில் குருவை விட குதிரைக்காரன் சிறந்தவனாக விளங்குகிறார். இதை குருவும் ஒப்பு கொண்டார்.