
முன்னொரு காலத்தில் அரசன் ஒருவனிடம் மந்திரி ஒருவன் வேலை பார்த்து வந்தான். அவன் ஏதோ ஒரு சிறு குற்றம் செய்து விட்டான். அதற்கு அந்த மன்னன் மந்திரி மீது மிகவும் கோபம் அடைந்தான். அவனுக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தான். அந்த தண்டனை அவனை உயரமான ஒரு கோபுரத்தின் மீது உச்சி அறையில் சிறை வைக்க கட்டளை விட்டான் அதனை காவலர்களிடம் நிறைவேற்றும் படி கூறினான். அவன் அந்த கோபுரத்தில் இருந்த படியே உச்சி வெயிலில் சாக வேண்டும் இதுவே அவன் செய்த குற்றத்திற்கான சரியான தண்டனையாக இருக்கும் என்று காவலாளியிடம் தெரிவித்தார்.
மந்திரிக்கு பத்தினி பெண் ஒருத்தி மனைவியாக இருந்தாள். அவள் தன் கணவன் எது கூறினாலும் செய்து காட்டுவாள். அவள் தன் கணவனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று எண்ணினாள். ஒரு நாள் இரவில் அவள் கோபுரத்தின் அடியில் வந்து கணவனை கூவி அழைத்து நான் எந்த விதத்திலாவது முடியுமா என்று கேட்டாள். அதற்கு கணவன் நிச்சயமாக உன்னால் உதவ முடியும். மந்திரி அடுத்த நாள் இரவில் வரும் போது தடித்த நீண்ட கயிறு ஒன்று, மெல்லிய கயிறு ஒன்று, சரட்டு ஒன்று, பட்டு நூல் கண்டு ஒன்று, வண்டு ஒன்று, சிறிது தேன் இவற்றை கொண்டு வரும் படி கணவன் மனைவியிடம் கூறினான்.
கணவன் கூறியதை கேட்டு மனைவி வியப்பு உற்றாள். இதை வைத்து தம் கணவன் என்ன செய்வான் என்று யோசித்தாள். அவளுக்கு தன் கணவன் புத்திசாலி இதை வைத்து எப்படியாவது தப்பித்து விடுவார் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. அவள் அடுத்த நாள் அப்பொருட்கள் எல்லா வற்றையும் கொண்டு வந்து தன் கணவனிடம் காட்டினாள்.
வண்டின் தலையில் சிறிது தேன் பூசி, அதன் உடலில் பட்டு நூலை இருக்கி கட்டி, கோபுரத்தின் உச்சி நோக்கி வண்டின் தலை இருக்கும் படி சுவரில் வண்டை வைக்கும் படி வைக்க மனைவியிடம் கணவன் கூறினார் மனைவியும் அவ்வாறே செய்தாள்.
தலையில் இருந்து வருகின்ற தேனின் மனத்தால் கவரப்பட்ட வண்டு உயரத்தில் எங்கோ பெண் இருப்பதாக எண்ணிக்கொண்டு மேல் நோக்கி போக தொடங்கியது. அப்படியே கோபுர உச்சியை அடைந்து விட்டது.
உடனே மந்திரி வண்டி பிடித்து பட்டு நூலை பற்றி கொண்டான். பின்னர் சரட்டு நூலின் முனியை பட்டு நூலில் கட்டும் படி மனைவியிடம் கூறினார். பட்டு நூலை மேலே இழுத்து சரட்டு நூலை பிடித்துக் கொண்டான். பிறகு சரக்கு நூலில் மெல்லிய கயிற்றை கட்டச் சொன்னார். மெல்லிய கயிறு கைக்கு எட்டிய பின்பு தடித்த கயிற்றை மறு நூலின் கற்றும்படி கூறினார். தடித்த கயிற்றின் ஒரு நுனி மேலே வந்த பின் எல்லாம் எளிதாயிற்று. கயிற்றின் வழியாக இறங்கி தப்பித்து விட்டான்.
நமது உடலில் சுவாச இயக்கம் தான் பட்டு நூல் அதனை கட்டுப்படுத்துவதன் மூலம் சரட்டு நூலாகிய நாடி இயக்கங்களையும், அதன் மூலம் மெல்லிய கயராகிய எண்ணங்களையும் இறுதியாக தடித்த கயிராகிய பபிராணனையும் கட்டுப்படுத்தி நாம் முக்தி பெறுகிறோம்.