
ஒரு அடர்ந்த காட்டின் நடுவில் நீண்ட ஆறு ஒன்று இருந்தது. இந்த ஆறு எப்போதும் வற்றாமல் இருந்ததால் அந்த காடு மிகவும் பசுமையாக இருந்தன.இந்த ஆற்றின் பக்கத்தில் இருக்கும் மரம் செடிகள் மிகவும் பசுமையாகவும் செழிப்பாகவும் இருந்தன. காடுகள் செழிப்பாக இருந்தாலும் அக்காட்டில் இருந்த விலங்கு ஒன்று மிகவும் வருத்தப்பட்டது. முதலை தான். இந்த முதலைக்கு வயதாகிவிட்டதால் சரியாக உணவு கிடைக்காமல் உடல் மெலிந்து காணப்பட்டது. அதனால் உணவுகளை தேடியும் செல்ல முடியவில்லை.
ஒருநாள் ஆற்றில் இருந்த மீன்களை பிடிக்கும்போது மீன்கள் நழுவி நழுவி சென்றதால் பல மணி நேரங்களாக தோல்வியடைந்த முதலை ஆற்றின் ஓரத்தில் சோர்வாக அமர்ந்து இருந்தது. அதற்கு அதிக அளவில் பசி எடுக்கிறது. ஆனால் உணவுதான் கிடைக்கவில்லை.
ஆற்றின் ஓரத்தில் பல மரங்கள் செழிப்பாக இருந்ததால் முதலில் அமர்ந்திருந்த மரத்தின் மேல் குரங்கு ஒன்று பழங்களை பறித்து உண்பதை கண்ட முதலைக்கு பார்க்கும் போதே எச்சில் ஊரி குரங்கிடம் கேட்டது. எனக்கும் சிறிது பழங்கள் தருவாயா, சரியாக உணவை உண்பதுகிடையாது. குரங்கும் மரத்தில் இவ்வளவு பழங்கள் உள்ளதே என்று முதலைக்கு பறித்து கொடுத்தது. பழங்களை உண்ட உடன் அதற்கு பசியும் தீர்ந்து போனது.குரங்கு உனக்கு பசி எடுக்கும்போது வா நான் பழங்களை தருகிறேன் என்று கூறியது.
முதலையும் பழங்களை உண்பதற்காகவே தினமும் வந்தது. குரங்கும் முதலையும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். முதலிடம் மகிழ்ச்சியாக நீரில் முதலையின் முதுகின் மேல் சுற்றுவது போன்று விளையாடினர்.
ஒருநாள் முதலை குரங்கிடம் நண்பா பழங்கள் சுவையாக உள்ளது.என் மனைவியும் பசியாக இருப்பாள் அவளுக்கும் சிறிது பறித்து கொடு என்று கேட்டது. குரங்கும் சுவையான பழங்களை பறித்து கொடுத்தது. பழங்களை எடுத்து சென்று இக்கரையிலிருந்து அக்கரைக்கு உள்ள மனைவியிடம் சென்றது. பழங்களை கொடுத்தது.பழங்களை உண்ட மனைவி முதலை பல நாட்களாக இறைச்சி உண்ண வில்லை என்பதால் தன் கணவனிடம் இந்த பழங்களை இவ்வளவு சுவையாக உள்ளது.இந்த பழத்தை உண்ணும் குரங்கு எவ்வளவு சுவையாக இருக்கும் என்று எண்ணி எனக்கு தெரியாது அந்த குரங்கின் இதயம் வேண்டும். என்ன செய்வீர்கள் என்று தெரியாது என்று கூறியது. கணவன் முதலை குரங்கு என் நண்பன் நான் எப்படி அவனை,எனக்குத் தெரியாது எதையும் கொண்டு வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியது.
வேறு வழி இல்லாமல் இக்கரைக்கு வந்தது.குரங்கிடம் தன் மனைவி உன்னை பார்க்க வேண்டுமா உனக்கு பிடித்த உணவை தயார் செய்து உள்ளார். வா போகலாம் என்று அழைத்தது. குரங்கும் எதுவும் யோசிக்காமல் முதலையின் முதுகின் மேல் அமர்ந்து சென்றது. முதலைக்கு வருத்தமாகவே இருந்தது.எதற்காக அழைத்துப் போகிறோம் என்று கூட தெரியாமல் மகிழ்ச்சியாக உள்ளது என்று எண்ணி உண்மையை கூறி விடலாம் என்று குரங்கிடம் தன் மனைவி கூறியதை கூறியது.
குரங்கிற்கு முதலை கூறியதை கேட்டவுடன் பயத்தில் இருந்தாலும் பாதி வழி வந்து விட்டோம் என்ன செய்யலாம் என்று யோசித்தது. சிறிது நேரம் கழித்து யோசனை வந்தது.
முதலிடம் நண்பா நான் பாதி வழியில் வந்து கூறினாய் முதலில் கூறியிருந்தால் என் இதயத்தை எடுத்து வந்து இருப்பேனே! என் இதயம் மரத்தில் உள்ளது வா சென்று எடுத்து வரலாம் என்று கூறியது. முட்டாள் முதலை குரங்கு கூறியதை நம்பி கரைக்கு சென்றது. கரையை அடைந்த உடன் குரங்கு மரத்தில் தாவியது. நண்பா நீ பஸ்ஸில் இருந்தபோது பழங்களைக் கொடுத்து எவ்வளவு உதவி செய்தேன். ஆனால் நெருங்கி நண்பனே இப்படி செய்கிறாயே என்று கூறியது. முதலை தன் நல்ல நண்பனை இழந்து விட்டோமே என்று வருத்தமாக வீட்டிற்கு சென்றது.
ஆபத்து வரும்போது கஷ்டங்கள் வரும்போது நம் பயப்படக்கூடாது. குரங்கை போன்று சாதுரியமாக செயல்பட வேண்டும்.
மையக்கருத்து
நம்மை நம்புவர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.