
ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும்தான் விடுமுறை விடுவார்கள். வேறு எங்கும் செல்லாமல் கதவை மூடிக்கொண்டு நன்றாக தூங்கவேண்டும். பள்ளியிலும் இப்படி செய்கிறார்கள், என்றாள் கல்லூரியிலும் இப்படி செய்தால் எவ்வளவு கோபம் வருகிறது.
தொல்லை கொடுக்கும் தொலைபேசியில் ஆஃப் செய்துவிட்டு, கதவை சாத்திவிட்டு காற்றாடியை போடலாம் என்று பார்த்தால் மின்சாரம் கிடையாது. சரி என்ன செய்வது நாம் என்ன எசியில் பிறந்தோம். தரையில் நன்றாக உறங்க ஆரம்பித்து விட்டேன்.
கண்ணை திறந்து பார்த்தால் என்னை சுற்றிலும் பாழடைந்த இடத்தில் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். என்னுடன் ஒரு நாயும் உள்ளது. இந்த நாய் நான் எங்கு சென்றாலும் என் பின்னே வருகிறது. இதில் யாருடைய நாய் என்று எனக்கு சிறிதும் தெரியவில்லை. இருந்தாலும் இந்த இடத்தில் என்னையும் இந்த நாயும் தவிர வேறு யாருமில்லை, சரி இந்த நாய்களுக்கு டாம் என்று பெயர் வைத்தேன்.
இந்த இடத்தை பார்த்தால் எனக்கு பயம்தான் அதிகமாகிறது. காரணம் படங்களில் நரகத்தை இப்படித்தான் காட்டுவார்கள். ஒரு வேலை இறந்து நரகத்திற்கு வந்து விட்டோமா என்று தெரியவில்லையே!! அப்படி எதுவும் பெரிய தவறு செய்ய வில்லையே!! அனைவரும் செய்யும் தவறு தானே நானும் செய்தேன். தெரியாமல் வீட்டில் இருப்பதை திருடி சாப்பிடுவேன். இதற்கெல்லாம் நரகத்திற்கு வருவோம் என்று தெரிந்திருந்தால் செய்திருக்கமாட்டேன்.
வீட்டில் நல்ல நாட்களில் சாமி வணங்குவது வழக்கம். அப்படி வீட்டில் பலகாரம் செய்வார்கள். எனக்கு எல்லாத்துக்கும் அவசரம் என்பதால் யாருக்கும் தெரியாமல் பலகாரத்தை திருடி சாப்பிட்டு விடுவேன். உலகில் எவ்வளவு தவறுகள் எல்லாம் நடக்கிறது, அதற்கு என்ன தண்டனை? எதற்கு நரகமா?நானும் டாமும் நடந்தோம். பயத்தில் கூற மறந்துவிட்டேன், என் பெயர் பவுன்குமார் தூரத்தில் ஏதோ ஒரு சிறிய வெளிச்சம். என்னை அந்த இடத்திற்கு போக வேண்டும் என்று மனம் துடித்தது. அந்த இடத்திற்கு அது ஒரு சந்து மாதிரி இருந்தது, என்ன இருக்கும் என்று ஆர்வம் அதிகமாகி கொண்டே இருந்தது. நான் 108 ஆம்புலன்சில் பிறந்து விட்டேன் என்று தெரியவில்லை. ஆர்வம் அதிகமாகியது. வேகமாக சென்றேன். இந்த சந்தை கடந்து வெளியே வந்தேன். அப்போது நான் பார்த்த காட்சியை என்னால் நம்ப முடியவில்லை. அப்படி என் இருபது வருட வாழ்க்கையில் பார்த்திருக்கமாட்டேன். நீங்களும் இப்படி ஒரு சூழலை பார்த்து இருக்க மாட்டீர்கள். என் கண்ணையே நம்ப முடியவில்லை. கண்ணை கசக்கி பார்த்தேன். அப்போது என்னுடன் இருந்த நாயும் மற்றும் அந்த சந்தையும் எங்கு போனது என்று சுத்தமாக தெரியவில்லை. மீண்டும் தனிமையில் இருந்தேன். இந்த இடத்திலும் நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது என் காதுக்கு ஒரு பாடல் கேட்டது.என்ன பாடல் தெரியுமா??நடுகாட்டில், தனிமை வந்ததே,.... என்ற யுவன் சங்கர் ராஜாவின் பாடல்
அருமை,... மிக அருமை,....சுற்றிலும் யாருமில்லை. தொலைவில் யாரோ ஒருவர் இருப்பது போல என் கண்களுக்குத் தெரிந்தது. அது யார் என்று பார்க்கலாம் என்று சிறிது சிறிதாக அவரிடம் சென்றேன். அது யார் என்று பார்த்தால், இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒருத்தர் ஆ என்று வாயை பிளந்தேன்.
நான் இருக்கும் சூழ்நிலையை கூறுகிறேன். மாலை நேரம் ஐந்து மணியிலிருந்து ஆறு மணி இருக்கும். மழை வருவது போல உள்ளது, ஆனால் மழை வரவில்லை. குளிர்ந்த காற்று வீசுகிறது. இது மட்டுமில்லாமல் நான் இருக்கும் இடம் அது ஒரு அழகிய நீண்ட தொடர் மண் சாலையின் ஓரத்தில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்கியது. இந்த பூக்களில் பட்டாம்பூச்சியும் தேனை எடுப்பதற்காக தேனீக்களும் பறந்து இந்த பூவிலிருந்து அந்த பூவிற்க்கு மாறும் அழகு இருக்கே!! இது மண் சாலையில் சிறிது தூரத்தில் ஒரு பெரிய மரம் ஒன்று மட்டும் இருந்தது. மற்றொரு மரங்கள் எங்கே என்று கேட்காதீர்கள்!! என் கண்ணுக்கு ஒரே மரம் மட்டும் தான் தெரிந்தது. இந்த மரம் பசுமையாகவும், பூக்களும், அரும்புகளும் நிரம்பி வழிந்தது. மரத்தின் கீழே பூக்கள் உதிர்ந்து, கீழே விழுந்துள்ளது. அதுவும் மண்சாலையில், அதுமட்டுமில்லாமல் அந்த அழகிய மரத்தில் பல வகையான பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பூக்கள் மட்டும் அந்த மரத்திற்கு அழகு சேர்க்கவில்லை. மரத்தில் இருக்கும் பறவைகளின் முட்டைகளும், பல வண்ணங்களில் உள்ளதால் அந்த மரம் பார்ப்பதற்கு மரமாகவே இல்லை. கூறப்போனால் இக்காலத்தில் அழகான பெண்கள் போலவே இருந்தது. ஏனென்றால் அவ்வளவு அழகு சாதனப் பொருட்கள் சேர்த்துள்ளது.
இந்த மரத்தில் எப்போதுமே அதிக அளவில் கூச்சலும், சத்தமும் இருந்துகொண்டே இருக்கும். அந்த மண் சாலையில் பூக்களுடன் சிறிது சிவப்பு நிறமும் காற்று கலந்து வீசுவதை பார்க்க கடவுள் இதற்குத்தான் கண்களை படைத்தார் என்று தோன்றுகிறது.
திடீரென்று இந்த இடமே அமைதியானது,காற்று வீசவில்லை,பறவைகளின் கீச்சிடும் சிறிதுமில்லை,சற்று அமைதியாகவே நிலவியது.
நான் அதிர்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன தான் நடக்கிறது என்று பார்க்க, அப்போது என் கண்களுக்கு தெரிந்த உருவத்தை கண்டு மிரண்டு போய் நின்றேன். சரியாக தெரியவில்லை. அந்த உருவத்தின் சற்று கிட்டே சென்று பார்க்கலாம் என்று பார்த்தேன். அப்போது தான் தெரிந்தது. அது ஒரு பெண் என்று,
இப்படி ஒரு சூழ்நிலையில் ஒரு பெண்ணா என்று வாயை பிளந்தேன். கண்கள் கொஞ்சம் தெரியவில்லை, வயதாகி விட்டது அல்லவா!! என்ன வயதா 21 வயதுதான். எனக்கும் அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் அதிகமாக இருந்தது. சரி என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே நடக்க ஆரம்பித்தேன். சிறிது அருகில் சென்றேன். அப்போது நான் கண்ட காட்சி வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் மற்ற மொழிகளிலும் வலைவீசிப் தேடினேன். வார்த்தைகள் கிடைக்கவில்லை.
பாடல் தானாகவே கேட்க ஆரம்பித்தது
அந்த சாலையோரம், மாலை நேரம்,.....என்ற ஹிப்ஹாப் தமிழாவின் பாடல் கேட்டது.இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு அழகில் இப்படி ஒரு பாடல் கேட்டவுடன் அந்த இடத்தில் மெய்சிலிர்த்து நின்று விட்டேன்.
அழகு என்ற வார்த்தையை இவ்வளுக்காக தான் கண்டுபிடித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பின்னழகை பார்த்து தான் இவ்வளவு நேரம் தனியாக புலம்பி கொண்டு நின்றிருந்தேன். நான் பார்த்த அழகை அழகாக கூறுகிறேன். இப்பொழுது கூட பாடல் பாட தோன்றுகிறது.அழகென்றால் அவள் தானா,....
தலைமுடி;
அக்காலத்தில் அமாவாசை இரவில் திருடர்கள் அதிக எண்ணிக்கையில் நகையும், பணமும் திருடுவது வழக்கம். அப்படி ஒருநாள் ஒரு அரசர் வேறு ஒரு நாட்டில் இருந்து, அவர் நாட்டிற்குச் சென்று வந்தார். இரண்டு நாட்கள் பயணம் செல்ல வேண்டும். அவர் நாட்டை அடைவதற்கு முன் சில, பல குகைகள் தாண்டி தான் வர முடியும். இதை தெரிந்த திருடர்கள் அரசிடம் இருக்கும் பொற்காசுகளை திருட திட்டமிட்டு மறைந்து இருந்தனர். அருமையான இருட்டில் பக்கத்தில் இருப்பவர்களை சுத்தமாக தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசர் அந்த வழியில் வந்தார். திருடர்கள் தயாராக இருந்தனர். அந்த இருட்டில் திருடிவிட்டனர். திருடியதை வெளிச்சத்தில் பார்த்தால், ஏற்கனவே அவர்கள் திருடியதை மீண்டும் திருடியுள்ளனர். அதாவது எதிரெதிரே உள்ளவர்களிடமிருந்து திருடியுள்ளனர் அரசர் வேகமாக சென்று உள்ளார். இதை ஏன் கூறினான் தெரியுமா??இப்படி இருக்கும் இவளின் தலைமுடியின் அம்மாவாசை கருப்பு நிறத்தில் அதாவது அவள் தலையில் தார் ஊற்றியது போல, அப்படி ஒரு கருப்பு நிறத்தில் முடிகள் இருக்கும்.
மல்லிப்பூ
அமாவாசையில் பௌர்ணமி நிலவு
கருமையான கூந்தலை நன்றாக தெரிந்தது, அவள் மல்லிப்பூ வைத்திருந்தது. அவள் கூந்தல் அவள் இடைக்கு கீழே இவ்வளவு நீளமாக இருந்தது. இவள் நடக்கும் நடையில் கூந்தல் அப்படியும் இப்படியுமா ஊஞ்சல் போல ஆடிக் கொண்டு இருந்தது. அவள் தொலைவில் இருந்தாலும் அவள் வைத்திருக்கும் மல்லி பூ வாசனை குளிர்ந்த காற்று வீசும் பாருங்கள். உறைந்து போனேன்!!
இடை
அரை நிலவின் அழகிய வளைவு
அவள் இடையில் குழந்தையை தூக்கி வைத்தால் அந்த வளைவில் வழுக்கிக்கொண்டே போகும் அளவில் இருக்கும். இப்படி விளையாட குழந்தைக்கு அதிக அளவில் பிடிக்கும். சறுக்கு மரம் விளையாடுவார்கள் இவர் இடுப்பில் குழந்தைகள்.
ஒரு ஒரு துளியாக மழை பொழிவு சிறிது சிறிதாக பெய்ந்து கொண்டிருந்தது. அப்போது அவள் இடையில் ஒரு மழைத்துளி விழுந்து சிதறியது பாருங்கள் கடவுளே!!என்னை ஏன் உயிரோடு வைத்திருக்கிறாய் என்று தனிமையில் புலம்பிக்கொண்டிருந்தேன்.
உடை
சிவப்பு நிற ஜாக்கெட்.பச்சை நிற தாவணி.கையில் நீல நிற வளையல்
அதுவும் ஒரு நிறத்தில் மட்டும்தான். மறுபுறத்தில் வாட்ச் கட்டி இருந்தாள். விரலில் ஒரு அழகிய ரிங். கால்களில் கொலுசு சத்தம்.சிறிதுநேரம் இவ்வளவு நேரம் கூறியதை கற்பனை செய்து பாருங்கள். இப்படி ஒரு அழகான சூழ்நிலையில் அழகிய தேவதையின் பின்புறத்தில் நான் நிற்கிறேன். எனக்கு ஆர்வம் ஆசையும் அதிகமாகி, அவளின் முகத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று சிறிது வேகமாக நடந்தேன். அவள் அந்த பசுமையான மரத்தின் அருகில் சென்று விட்டால், நான் சிறிது தொலைவில் தான் இருந்தேன். அவளை ரசித்திருக்கிறேன்.
மண் சாலையில் விழுந்த பூக்கள் காற்றில் பறக்கும் போது அவளும் என் பக்கம் திரும்பும் போது,... எனக்கு ஆர்வம் தான் அதிகம். எப்படி இருப்பாளோ!!!!! என்று அவள் முகத்தை காட்ட போராளோ என்று எண்ணி ஆசையில் பனிக்கரடி போல உறைந்து போய் நின்று கொண்டிருந்தேன். அவளும் திரும்பினாள், நான் அவளின் முகத்தை பார்ப்பதற்குள் மழை வந்துவிட்டது. அதுவும் பக்கத்தில் இருப்பவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. இப்படி இருக்கும்போது என் கனவு தேவதை என் கண்முன் அவள் திரும்பி நிற்கிறாள். ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை, பத்து நிமிடத்தில் மழை நின்றது. ஆனால் அவள் வேறொரு பக்கத்தில் திரும்பி இருந்தாள்.
மரத்தின் கிளைகளை பிடித்து குலுக்கிக் கொண்டும் அதில் வரும் மழை துளிகள் அவள் மேலே விழுவதைக் கண்டு மகிழ்ந்தும். அவள் செய்வதை நான் கழுகுபோல கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இது மட்டுமில்லாமல் பறவைகள் மழை நின்றவுடன் அதன் கூட்டிலிருந்து வெளியே செல்லும் போது பக்கத்தில் இருக்கும் பூக்களை கடந்து போகும்போது, அந்த பூக்கள் உதிர்ந்து அவள் மேலே விழும் அழகிய காட்சி. அதுவும் பூக்களில் மழை துளியோடு அவள் மீது விழுவதை பார்ப்பதற்கு இரு கண்கள் 1000 ஆயிரம் கண்கள் தேவைப்படுகிறது.
அவளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகமாகிக் கொண்டே இருந்ததால், சிறிது நேரம் விளையாடி விட்டு சென்றவள். நான் வேக வேகமாக சென்று, அவள் மீது கை வைத்தேன். அப்போது திடீரென்று என் உடல் முழுவதும் குளிர ஆரம்பித்து விட்டது.என்னடா,..... குளிர்கிறது என்று பார்த்தால் காற்றில் மின்சாரம் வந்து சுழலுகிறது.இவ்வளவு நேரம் கண்டது எல்லாம் கனவா!!!!அவள் முகம் பார்த்து இருந்தால் திருப்தி அடைந்து இருப்பேன் அதற்குள்ளே கனவு கலைந்து விட்டதே,....