
ஒருத்தன் கடவுள் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தான். அதாவது, ஒரு நாளைக்கு 5 மணி நேரம் கடவுளை வழிபடுவான். ஆனால், அவன் மிகவும் எளிமையுடன் வாழ்ந்து வந்தான்.
அவனுக்கு, ஒரு நம்பிக்கை இருந்தது. கடவுள் நமக்கு நல்வழி காட்டுவார் என்று அந்த நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் மிகவும் பசியுடன் தெருவில் நடந்து சென்று இருந்தான். அப்போது ஒரு மாடு வந்து அவனிடம் உனக்கு ஏதேனும் உதவி வேண்டுமென்றால் கேளு நான் செய்கிறேன் என்றது. அப்போது அவன் என்னை கடவுள் பாத்துப்பார் என்று சொல்லி மறுத்து விட்டான். ஆனால், அவன் பசி தீரவில்லை.
இன்னும் கொஞ்ச தூரம் நடந்து சென்றிருந்தான். அப்போது ஒரு மாடு வந்தது அதுவும் உனக்கு ஏதேனும் வேண்டுமென்றால் என்னை கேளு என்று கூறியது. அப்போதும் அவன் மறுத்துவிட்டான் ஒரு சில மணி நேரம் கழித்து அவன் இறந்துவிட்டான். அப்போது அவன் கடவுளிடம் கேட்டான் கடவுளே ஏன் எனக்கு உதவவில்லை என்று கேட்டான். அப்போது கடவுள் நான் தான் உனக்கு 2 மாடுகளை அனுப்பி வைத்தேனே நீதான் அதை பயன்படுத்தவில்லை என்று கடவுள் கூறினார்.