
நாரதர் என்ற முனிவர் தேவர் ஒருவர் இருந்தார். மனிதர்கள் இடையில் பெரிய யோகிகளான முனிவர்கள் இருப்பதுபோல் தேவர்கள் யோகிகள் உள்ளன. நாரதர் மிகப்பெரிய யோகி அவர் எங்கும் இருப்பார்.
ஒருநாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுநாள் அவன் ஒரு இடத்தில் தியானம் செய்து கொண்டிருந்ததால் அவரை சுற்றி கரையான் புற்று கட்டி கொண்டிருந்தன.
அவன் நாரதர் அழைத்து எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்? . தான் சொர்க்கத்திற்கு செல்வதாக நாரதர் உரைத்தார். அப்போது ஆனால் ஆண்டவன் எனக்கு எப்போது அருள்புரிவான். எப்போது முக்தி அளிப்பான். என்று நீங்கள் கேட்டு வர வேண்டும் என்றார். நாரதர் சிறிது தூரம் சென்றார்.
அங்கே ஒருவன் பாடி குதித்து நடனமாடி கொண்டிருந்தான். அங்கிருந்த அவன் நாரதரே எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டான்? அவனது குரலில் அடக்கமும் சாந்தமும் இல்லை. நாரதர் அதற்கு நான் சொர்க்கத்திற்கு செல்கிறேன் என்று கூறினார். எனக்கு எப்போது கிடைக்கும் என்று கேட்டு வாருங்கள் என்றான் அவன். நாரதர் சென்று விட்டார். சிறிது காலத்திற்கு பிறகு நாரதர் அக் காட்டின் வழியாக நடந்து வந்தார்.
உடலைச் சுற்றி கரையான் புற்று வைத்திருந்த மனிதர் நாரதரே என்னைப் பற்றி பகவானிடம் கேட்டீர்களா என்று கேட்டார். ஆம் என்றார் நாரதர். பகவான் என்னைப்பற்றி என்ன சொன்னார் என்று கேட்டான் அவன். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்கு பிறகு முக்தி அடைவாய் என்று பகவான் உன்னிடம் உரைக்க சொன்னார் என்று நாரதர் அவனிடம் உரைத்தார்.
அதற்கு அவன் அழுது புலம்பி என்னிடம் கரையான்கள் புற்று கட்டும் வரை தியானத்தின் இன்னும் நான்கு பிறவிகள் ஆகுமா என்று புலம்பினார். நாரதர் மற்ற மனிதர்களிடம் சென்றார். பகவானிடம் கேட்கிற நாரதரே என்றான் அவன். நான் கேட்டேன் புளியமரத்தில் எத்தனை இலைகள் இருக்கிறதோ அத்தனை காலத்திற்கு பிறகு உனக்கு முக்தி கிடைக்கும் என்று பகவான் கூறியதாக நாரதர் அவனிடம் கூறினார். அதை கேட்டதும் அவன் மகிழ்ச்சியில் எனக்கு அவ்வளவு விரைவாக முக்தி கிடைக்க போகிறதா என்ற ஆனந்தம் பாடி விளையாடினான்.
அப்போது ஒரு குரல் மகனே உனக்கு இப்போதே இக்கணமே முக்தி அளிக்கிறேன் என்ற ஒரு குரல் அவனிடம் ஒலித்தது. அவனின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி அது. அவன் எத்தனை காலம் இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் என்று நினைத்தான். அத்தனை பிறவிகளிலும் அவன் உழைத்து பாடுபட தயாராக இருந்தான். எதுவும் அவனை தளரச் செய்யவில்லை. கரையான்கள் புற்று கொண்ட மனிதனுக்கு நான்கு பிறவிகள் கூட வெகு நீளமாக தோன்றியது. ஆனால் இவனுக்கோ புளிய மரத்தில் இருக்கும் இலைகள் கூட குறைவாகத் தோன்றியது. எனவே இவனுக்கு கடவுள் முக்தி கொடுத்து விட்டார்.
மோட்சத்தில் இருக்கும் அவனிடம் உள்ள ஆற்றலை விட ஆடி பாடி தெரியும் இவனிடமும் உள்ள ஆற்றலை அதிகம். யுகங்கள் காத்திருக்க தயாராக இருந்த மனிதனிடம் இருந்தது போன்ற விடாமுயற்சி மட்டுமே பெரும் போற்றி அளிக்கும்.