நரியும் இரண்டு பூனைகளும் (Nariyum irandu Poonaikalum) - தமிழ் சிறுகதைகள் (Tamil Sirukathaigal)

 

நரியும் இரண்டு பூனைகளும் (Nariyum irandu Poonaikalum) - தமிழ் சிறுகதைகள் (Tamil Sirukathaigal)

ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு ரொட்டி துண்டை எடுத்தன. அந்த ரொட்டி துண்டை சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, ரொட்டி சரி சமமாக பிரிக்க பட வேண்டும் என்று மற்ற பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது. 

இரண்டு பூனைகளும் சண்டையிட்டு களைத்துப் போயின அதனால் தொடர்ந்து சண்டை பிடிக்காமல் யாரிடமாவது சென்று ரொட்டியை பங்கிடுவோம் என்று தீர்மானித்தன. 

அதனால் இரண்டு பூனைகளும், ரொட்டியை பங்கு பிரிப்பதற்காக காட்டில் உள்ள ஒரு புத்திசாலி நரியிடம் சென்றன நரியும், ரொட்டியை சமமாகப் பிரிக்க ஒரு தராசை எடுத்து வந்தது. ரொட்டிகை இரண்டாக வெட்டித் தராசியின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது. 

தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது நரி, அந்தத் தட்டில் இருந்த ரொட்டி துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. 

அந்தத் தட்டிலிருந்த ரொட்டியை நரி எடுத்துக் கடித்து விட்டு தட்டில் போட்டது. 

இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. நரியும் மாறி மாறி ரொட்டித் துண்டுகளைக் கடித்துக் கடித்துக் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. 

இப்படியே ரொட்டி குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து இனி இந்த ரொட்டி துண்டை பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள ரொட்டி துண்டை தரும் படி கேட்டன. 

ஆனால் நரி, மீதமுள்ள ரொட்டி, தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக் கொண்டது. 

பூனைகள் வெட்கத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றன.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

Learn More