நாவடக்கம் இல்லாத அரசன் (Navadakkam Illatha Arasan) - தமிழ் சிறுகதைகள் (Tamil Sirukathaigal)

 

நாவடக்கம் இல்லாத அரசன் (Navadakkam Illatha Arasan) - தமிழ் சிறுகதைகள் (Tamil Sirukathaigal)

சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு, இந்த அரசன் திறமையானவன். நற்குணங்கள் பல உடையவன். ஆனால் நாவடக்கம் இல்லாதவன் யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர். 

ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப்பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப் பரிசுகள் பல பெற்றவர். அப்பரிசுகளை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்தால் மறுபடியும் ஏழ்மை நிலையை அடைந்தார். புலவர் பல நாட்கள் காத்துக்கிடந்த பின் ஒரு நாள் மூவனை அரசவையில் சந்தித்து பாடல் ஒன்றைப் பாடினார். 

"அரசே, நான் ஒரு புலவன். என் பெயர் பெருந்தலைச் சாத்தனார். 

"உமது பெயருக்கும் உருவத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லையே!" 

"ஏன் மன்னா அப்படிக் கூறுகிறீர்கள்?" 

"பெருந்தலைச் சாத்தனார் என்கிறீர்கள். உமது தலை பெரியதாக இல்லையே... சிறியதாகத்தானே இருக்கிறது." 

"மன்னிக்க வேண்டும் மன்னா பெருந்தலை என்பது எனது ஊரின் பெயர்!" 

", அப்படியா செய்தி 

"நான் குமணவள்ளலைப் பாடிப் பல பரிசுகள் பெற்றவன்!" 

இப்போதும் அவனிடமே செல்ல வேண்டியதுதானே. உன் போன்ற புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து அவன் ஆண்டியாகி இருப்பான். 

"அரசே, பழம் பழுத்த மரங்களை நாடித்தானே பறவைகள் செல்லும், அதைப் போல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி பாவலர்களாகிய நாங்கள் வருகிறோம். 

நீங்கள் பொய்யாக எதையும் புனைந்து பாடுவீர்கள். இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக் கேட்டு சிலர் மகிழந்துபோய் உங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். 

அவர்கள் தற்புகழ்ச்சியை விரும்புபவர்கள். நீங்கள் பொய் சொல்லியே பிழைக்கும் ஒரு வஞ்சகக் கூட்டம்.. யாரங்கே இந்தப் புலவரை வெளியே அனுப்பு. 

"இல்லை, நானே சென்றுவிடுகிறேன்." 

புலவர் அவமானத்தால் முகம் சோர்ந்து சென்றதைக் கண்ட மூவன் சிரிசிரி என்று சிரித்தான். மூவன், சேரன் கணைக்கால் இரும்பொறைக்குக் கட்டுப்பட்ட ஒரு குறுநில மன்னன். மூன்று ஆண்டுகளாகவே மூவன் கப்பம் கட்டாததை அறிந்தான் இரும்பொறை. 

என்ன சொல்கிறான் மூவன் என்று அறிந்துவா்!" எனத் தூதுவனை அனுப்பினான். மூவன் அவைக்கு வந்த தூதுவன் மூவனை மரபுப்படி வணங்கி, "மன்னன் கணைக்கால் இரும்பொறையின் தூதுவன் நான்" என்றான். 

"கணைக்காலனுக்குக் கருவூலத்தில் பணத்தட்டுப்பாடு வந்ததும் என் நினைவு வந்துவிட்டதாக்கும்... இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?" 

மன்னா, நான் உங்களிடம் யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. எங்கள் மன்னருக்கு மூன்று ஆண்டுகளாக நீங்கள் கட்ட வேண்டிய திறையைச் செலுத்தவில்லை. 

"தூதுவனே! நன்றாகக் கேட்டுக் கொள். எனது நெய்தல் நாடு இன்றிலிருந்து சுதந்திர பூமி. நாங்கள் இனி யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம்." 

"எமது அரசரின் பெருமையையும், வலிமையையும் தெரிந்தே நீங்கள் இப்படிப் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது. 

"உனது கணைக்காலனுக்கு நான்தான் காலன். என்னைப் போர்க்களத்தில் வந்து சந்திக்கும்படி கூறு". 

உங்களால் எம் மன்னனை வெல்ல முடியும் என்று நீவிர் நினைப்பது உங்கள் இறுமாப்பு எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங்கத்தக்கது. 

"அடே தூதுவனே .... இங்கே நிற்காதே, ஓடிவிடு. இல்லையெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை!" தூதுவன் கணைக்கால் இரும்பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான். "தூதுவன் ஒருவனின் பற்களைத் தட்டுவேன் என்று நாவடக்கம் இல்லாமல் சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்." என்று முடிவு கட்டினான் இரும்பொறை. 

"மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? 

வேண்டாம். இது உங்கள் வீரத்திற்கு இழுக்கு. நாவடக்கமின்றிப் பேசிய அந்த மூவனை வென்று அவன். 

முன்பற்களை உங்களிடம் கொண்டு காணிக்கையாக்குகிறேன்" தளபதி வீரமுழுக்கமிட்டான். 

"அதுவும் சரிதான். மூவன் இனி வாயைத் திறக்கும் போதெல்லாம் நாவடக்கம் வேண்டும் என்பதை வேண்டும். அவன் முன்பற்களைக் கொண்டு வருவது தான் நன்று!. 

"சரி மன்னா, அப்படியே செய்கிறேன்." 

"தளபதியாரே, மூவனின் முன்பற்களைப் பிடுங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி, 

"யாகாவராயினும் நாகாக்க. நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பாரீர்! என்று அதன் கீழ் எழுதி வையுங்கள்." 

"உத்தரவு மன்னா !" 

கணைக்கால் இரும்பொறையின் படைவீரர்கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர். நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன் பற்கள் தட்டப்பட்டன. மன்னன் கூறியவாறே அவை தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவில் பதிக்கப்பட்டன. 

சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான். தன் நாவடக்கமற்ற செயலால் தன் தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர்விட்டான். குழந்தைகளே! வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிறருடைய மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு நல்ல பாடம்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

Learn More