
ஒரு அழகிய காட்டில் விலங்குகள் பறவைகள் என பல வகையான உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காடு எப்போதுமே பசுமையாகத்தான் காணப்படும். காட்டில் முழுவதும் விலங்குகளின் சத்தமும் பறவைகளின் கூச்சலும் தான் அதிகளவில் காணப்படும். அந்த காட்டில் பறவைகள் எப்போதுமே கூட்டமாக தான் சென்று அதற்கு தேவையான உணவுகளை தேடி உண்ணும். இந்த பறவைகளுக்கு ராஜ ஒன்று இருந்தது. முன்னின்று வழி காட்டுவது எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் அதில் இருந்து எப்படி செல்வதென்று உதவியாக இருக்கும்.
வெயில் காலம் வந்ததால் பசுமையான காடு வரண்டு போனது. பல நாட்களாக மழை பொழிவு கிடையாது. மரத்தில் இலைகள் இன்றி வெட்டவெளியாக காணப்பட்டது. காட்டில் இருந்த விலங்குகளும் உணவு தேடி மற்ற காட்டிற்கு சென்றது.
இந்தப் பறவைகளின் கூட்டம் எங்கு தேடியும் உணவு கிடைக்காமல் பல நாட்களாக உண்ணாமல் இருந்ததால் பறவைகளின் ராஜா உணவு இல்லாமல் இருந்தால் நம் கூட்டம் இல்லாமல் போய்விடும் என்று எண்ணி உணவைத் தேடி வானில் பறந்தன. பல மணி நேரங்களாக பரந்தும் அதற்கு உணவே கிடைக்கவில்லை. அனைத்து பறவைகளும் அசந்து போனது.
பறவைகளால் பறக்க முடியாமல் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று எண்ணி ஒரு மரத்தில் அமர்ந்தனர். அப்போது மரத்தடியில் தானியங்கள் அதிக அளவில் கொட்டி இருந்ததை கண்டு அவை தவிர மற்ற பறவைகள் அனைத்தும் தானியத்தை உண்ண சென்றது. ராஜா பரவை எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. அந்தப் பறவைகளுக்கு வலை இருப்பது தெரியாமல் பசி மயக்கத்தில் இருந்ததால் உணவு மட்டும்தான் அதன் கண்களுக்கு தென்பட்டது. வலையில் மாட்டிக் கொண்டு பறவைகள் தவிப்பதைக் கண்ட ராஜா பறவை என்ன செய்வதென்று தெரியாமல் கையை தன் மூக்கால் ஒற்றி எடுக்க முயன்றபோது அதுவும் மாட்டிக்கொண்டது.
தொலைவில் வேடன் வருவதை கண்ட பறவைகள் பயந்தனர். அப்போது தான் ராஜா பறவை யோசனை வந்தது. வேடனுக்கு ஆஹா என்று பல பதவிகள் மாற்றிக்கொண்டன. அதிர்ஷ்டம் தான் என்று பேராசையில் மிதந்து கொண்டே வந்தான். ராஜா பறவை அனைவரும் நன்றாக கவனியுங்கள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பறந்தால் தான் நம் உயிர் பிழைக்க முடியும். ஆகையால் அனைவரும் பறந்து செல்லலாம் என்று கூறி அனைத்து பறவைகளும் வானில் பறந்தன.
பறவைகள் பறப்பதை கண்ட வேடன் அதிர்ச்சியடைந்து பின்புறத்தில் சிறிது தூரம் ஓடும் பிடிக்க முடியாமல் போனது. வானில் பறந்த பறவைகளை வேடிக்கை பார்த்தான்.
வேடன் இடம் இருந்து தப்பித்து விட்டோம்.இந்த வலையை எப்படி எடுப்பது என்று ராஜபார்வை யோசித்துக்கொண்டு இருக்கும்போது அதன் கண்களுக்கு எலி ஒன்று வலை தோன்றுவதை கண்டு அதனிடம் உதவி கேட்கலாம் என்று அனைத்து பறவைகளும் சென்றன. எலியிடம் நடந்ததை அனைத்தும் கூறி உதவி கேட்டனர். எலியும் ஒவ்வொரு பறவையிடம் சென்று தன் பற்களால் கடித்து விடுதலை செய்தது.அனைத்து பறவைகளும் எலியைப் பார்த்து நீங்கள் செய்த இந்த உதவி எங்கள் உயிர் இருக்கும் வரை மறக்க மாட்டோம் என்று நன்றி கூறி வானில் பறந்தன. அனைத்து பறவைகளும் ராஜபார்வை பற்றி பேசிக்கொண்டே தன் காட்டிற்குச் சென்றன.
கதையின் மையக்கருத்து
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.