
ஒரு முறை நாரதர் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து பகவானே மாயை எனக்கு காட்டுங்கள் என்று கேட்டார். அதற்கு பகவான் நேரம் வரட்டும் காண்பிக்கிறேன் என்று கூறி நாரதரிடம் சமாளித்து விட்டார். சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் கிருஷ்ணர் நாரதரை தன்னோடு பாலை வன பயணத்திற்கு வருமாறு அழைத்தார்.
பலகாத தூரம் நடந்த பிறகு அவர் நாரதரைப் பார்த்து நாரதா எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது சிறிது தண்ணீர் கொண்டு வர முடியுமா என்று கேட்டார். அதற்கு நாரதர் பகவானே உடனே கொண்டு வருகிறேன் என்று நாரதர் புறப்பட்டார்.
சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு ஒரு வீட்டை பார்த்தார். அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டி யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டார். அழகான இளமங்கை பெண் ஒருத்தி கதவை திறந்து யார் என்று வினவினாள். அவளை பார்த்த மாத்திரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தண்ணீருக்காக காத்துக் கொண்டிருப்பதையும் தண்ணீர் கிடைக்கா விட்டாள் தாகத்தால் ஒரு வேளை அவர் இறந்து விட கூடிய சூழ் நிலையில் இருப்பதையும் நாரதர் மறந்தார். எல்லாவற்றையும் மறந்து விட்டு அந்த பெண்ணிடம் பேச தொடங்கினார்.
அன்று அவர் திரும்ப போகவில்லை. அடுத்த நாளும் அந்த பெண்ணோடு பேசிக்கொண்டே இருந்தார். அவர்கள் பேச்சு காதலாக மலர்ந்தது. இறுதியில் அந்த பெண்ணை திருமணம் செய்து தருமாறு அவள் தந்தையிடம் நாரதர் கேட்டார்.
அந்தப் பெண்ணின் தந்தையும் ஒப்புக்கொண்டார் .அவர்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றனர். இவ்வாறு பண்ணிரெண்டு ஆண்டுகள் கழிந்தன.
நாரதர் உடைய மாமனார் இறந்தார். அவருடைய சொத்திற்கு நாரதர் உரிமை ஆனார். மனைவி மக்கள் நிலபுலங்கள் ஆடு மாடுகள் என்று எல்லாவற்றை உடன் சந்தோஷமாக வாழ்வதாக நாரதர் எண்ணிக்கொண்டிருந்தார்.
ஒருநாள் திடீரென்று பெரிய வெள்ளம் ஒன்று வந்தது. பொங்கி வந்த ஆற்று வெள்ளம் கரையை உடைத்துக்கொண்டு கிராமத்திற்குள் சென்றது. வீடுகள் இடிந்து விழுந்தன. மனிதர்களும் விலங்குகளும் வெள்ளத்தில் அடித்துச் சென்றனர். வெள்ளை வேகத்தில் எல்லாம் மிதந்து கொண்டு சென்றிருந்தனர். நாரதர் தப்பிக்க வேண்டியிருந்தது. ஒருகையில் மனைவியும் மற்றொரு கையில் இரண்டு குழந்தைகளையும் தோள்பட்டையில் ஒரு குழந்தையும் சுமந்து கொண்டு அந்த வெள்ளத்தை கடக்க முயன்றார்.
சிறது அடி எடுத்து வைத்த உடனே வெள்ளம் அதிகரிக்கத் தொடங்கியது. கையில் இருந்த குழந்தைகள் அடித்துச் செல்லப்பட்டன. நாரதர் துயரம் உற்றார். அந்த குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் தோலில் இருந்த குழந்தையும் அடித்துச் சென்றது.
கடைசியில் அவர் கெட்டியாக பிடித்திருந்த மனைவியும் அழைத்துச் சென்றாள். அவர் மட்டும் கரை ஒதுங்கி தப்பித்தார். துயரத்தில் கதறினார் அவர்.
மகனே தண்ணீர் எங்கே நீ தண்ணீர் எடுத்து வர போனாய்! நான் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நீ போய் அரை மணி நேரம் ஆகிவிட்டது. என்று ஒரு மெல்லிய குரல் அவர் என்று கேட்டது.
அரை மணி நேரமா! என்று நாரதர் அதிர்ச்சியுடன் கேட்டார். பண்ணிரெண்டு நீண்ட ஆண்டுகள் அவர் மனதில் தோன்றி மறைந்து விட்டன. ஆனால் இந்த நிகழ்ச்சி எல்லாம் அரைமணிநேரத்தில் நடந்து முடிந்து விட்டன. இதுதான் மாயை!