
ஒரு ஊரில் முருகன் என்பவன் பால் பண்ணை நடத்தி வந்தான். அவனிடம் பால் சுத்தமாகவும் கெட்டியாகவும் கிடைக்கும். ஊர்ல இருக்க அனைவரும் அவனிடம் தான் பால் வாங்க வருவார்கள். அவனிடம் கெட்டியாகவும் சுத்தமாகவும் பால் கிடைக்க காரணம் அவனிடம் இருந்த மாடுகள்தான். அதை மிகவும் ஆர்வமாகவும் அக்கறையுடனும் கவனித்துக் கொண்டான் தன் குழந்தையை போல் அம் மாடுகளை பார்த்துக்கொண்டான். அவனிடம் எட்டு மாடுகள் இருந்தன அதற்கு பெயர் வைத்து பார்த்துக்கொண்டான்.
அதில் ஒரு மாட்டின் பெயர் ருத்ரா அந்த மாடு மிகவும் குறும்புத்தனம் உடையது. ஒரு நாள் முருகன் மாடுகளை வயலில் மேய்த்து கொண்டிருந்தான் அப்போது அந்த இடம் மிகவும் அமைதியாக இருந்தது. அது ருத்ரா வுக்கு பிடிக்கவில்லை நான் இருக்கும் இடம் அமைதியாக இருப்பதா என்று நினைத்து ஏதாவது குறும்பு பண்ணலாம் என்று எண்ணியது. அப்போது ருத்ரா யாருக்கும் தெரியாமல் அடர்ந்த புல்வெளியில் ஒளிந்து கொண்டது. பொழுது சாய்ந்தது அனைத்து மாடுகளும் முருகனிடம் வந்தடைந்தன ஆனால் ருத்ரா மட்டும் காணவில்லை. முருகன் எல்லா இடத்திற்கும் சென்று ருத்ரா ருத்ரா என்று கத்தினான். அப்போது ருத்ரா ஒளிந்து சிரித்துக் கொண்டிருந்தது. மிகவும் வருத்தம் அடைந்தான் முருகன்.
ருத்ரா முருகன் வருத்தமடைந்த பார்த்து இவன் நம்மீது பாசம் வைத்துள்ளார் என்று எண்ணியது . முருகனை பார்த்து ருத்ரா வெளியில் வந்தது முருகன் ருத்ரா நீ எங்க போயிட்டு என்று கேட்டான். நான் இங்கதான் மேய்ந்து கொண்டிருந்தேன் என்று கூறியது.
அப்புறம் முருகன் அனைத்து மாடுகளையும் வீட்டிற்கு ஓட்டிச் சென்றான். மற்ற மாடுகள் ருத்ரா எங்கு சென்று விட்டாய் என்று கூறினார் அதற்கு ருத்ரா முருகன் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்று பார்க்கத்தான் நான் ஒளிந்து கொண்டேன் என்று ருத்ரா கூறியது.
மற்ற மாடுகள் நீ புத்திசாலி தான் எங்களுக்கு எல்லாம் இந்த யோசனை வராது என்று ருத்ரா புகழ்ந்து பாடினேன். ருத்ரா மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
அடுத்த நாள் முருகன் பால் கறக்க சென்றான். அப்போது அனைத்து மாடுகளும் நன்றாக பால் கரைந்தன ஆனால் ருத்ரா மட்டும் சரியான பால் கொடுக்கவில்லை. முருகன் யோசித்தான் அனைத்து மாடுகளும் போல்தானே ருத்ரா வை பார்த்துக்கிறேன் ஏன் இது மட்டும் சரியா பால் கொடுக்கல. அந்தப் பாலை முருகன் விற்று விட்டு அந்த காசை வைத்து ருத்ரா வுக்கு மக்காச்சோளம் மற்றும் புண்ணாக்கையும் வாங்கி ருத்ரா வுக்கு கலந்து கொடுத்தான். அப்போது மற்ற மாடுகள் ருத்ரா விடம் நீ வேண்டுமென்றே பால் சரியாக கரக் காம முருகனை ஏமாற்றி புத்திசாலித்தனமாக நன்றாக சாப்பிடுகிறார் என்று கூறினார். அதற்கு ருத்ரா நான் ஏமாற்றவில்லை நம்மிடம் இருந்து முருகன் சம்பாதிக்கும் காசை தான் நான் சாப்பிடுகிறேன் என்று ருத்ரா புத்திசாலித்தனமாக கூறியது. அப்போது மற்ற மாடுகள் யோசித்தனர் நாங்களும் தானே முருகனுக்கு பால் தருகிறோம் அப்ப நாங்களும் தானே உன்ன மாதிரி சாப்பிடணும் நீ மட்டும்தானே சாப்பிடுகிறாய் என்று ருத்ரா விடம் மற்ற மாடுகள் கேட்டன. அதற்கு ருத்ரா என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியது.