அறிமுகம் - குமார்
இவன் பெயர் குமார். வயது 21. இவனுக்கு அப்பா கிடையாது.குமார் தன் தாயின் வயிற்றில் மூன்று மாதம் இருக்கும்போதே அவனின் அப்பா இறந்துவிட்டார். எனக்கு உடன்பிறந்தவர்கள் அக்கா ஒருவர் மட்டும்தான். குமாரி உலகத்தில் வந்த காலம் முதல் இதுவரைக்கும் அம்மாவின் அன்பு மட்டும்தான் வளர்ந்து வந்தான். ஆனால் தற்போது அன்பு காட்டுவதற்கு யாருமில்லை. தெரியாதவர்களிடம் அதிகமாக பேசுவது கிடையாது. நெருங்கி பழகுபவர்களிடம் சிறிது நேரம் கூட பேசாமல் இருப்பது இல்லை. சிறிது வயதிலிருந்து அதிக குறும்புத்தனம் உடையவன். என்னதான் வயது 21 ஆனாலும் சிறுவயதில் இருந்த அனைத்து வதனமும் இன்று வரையிலும் உள்ளது.
காதல் பிடிக்கும். ஆனால் காதலிக்க பிடிக்காது. ஏனென்றால் இவன் குடும்பம் வறுமையில் இருப்பதால் நமக்கு எப்படி என்று யோசிப்பான். அதுமட்டுமின்றி பார்ப்பதற்கு உடல் எடை குறைவாக மெலிதாக தான் காணப்படுவான்.நம்மையெல்லாம் யாராவது காதல் செய்வார்களா என்று எண்ணம் மனதில்? பள்ளி முதல் கல்லூரி வரை யிலும் பெண்களுடன் தான் படித்தான். ஆனால் ஒரு பெண்களுக்குக்கூட காதலிக்கிறேன் என்று கூறியதே கிடையாது. அவர்களே வந்து பேசினாலும் முகம் கொடுத்து பேசுவதில்லை. காரணம் ஒரு தாழ்வு மனப்பான்மை. அதிகமாகவும் படிக்க மாட்டான் குறைவாகவும் படிக்க மாட்டான். இவன் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களில் நானும் ஒருவன். இவனின் கனவுக்கும் இவன் படித்ததற்கும் சிறிதுகூட தொடர்பில்லாமல் போனதால் கனவு மறைந்து போனது.அதிகளவில் பாசம் இருக்கும் ஆனால் அதை வெளியே எங்கும் காட்டிக் கொள்வது கிடையாது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது போல நடிப்பாள் ஆனால் உள்ளுக்குள்ளே அவனின் சோகம் வருத்தம் எல்லாம் அவனுக்கு மட்டும்தான் தெரியும். யாரிடமும் கூறுவதில்லை அப்படிக் கூறினாலும் அது பறிபோய்விடும். இன்றுவரை இவனை யாரும் புரிந்து கொண்டவர்கள் கிடையாது. இவன் படித்தவர்கள் என நண்பர்கள் என்று வைத்திருப்பான் ஆனால் உண்மையான நண்பன் யாரும் கிடையாது.
எனக்கு பிடித்தவர்கள் யாரும் இவனுடன் இருப்பது இல்லை. பிடித்து பொருட்களும் கிடைப்பதில்லை. அதனால் யாரையும் பிடிக்காது ஆசையெல்லாம் சிறிய வயதிலேயே அழித்துவிட்டான்.சிறிதளவில் கூற வேண்டுமென்றால் அன்புக்காக ஏங்கும் ஒருவன் தான் இவன்.