ஒரு காட்டில் ஒரு சிங்கம் ஒன்று வசித்து வந்தது அதன் பெயர் சரபி. அது அந்த காட்டின் ராஜாவாக இருந்தது. அதற்கு ஒரு மனைவி அச்சங்கத்தின் பெயர் பைரவி. அவர்கள் இருவருக்கும் ஆண் சிங்கம் பிறந்தது அச்சங்கத்தின் பெயர் சிம்பா. சரபிக்கு ஒரு தம்பி இருந்தது அது வின் பெயர் ராக்கி. ராக்கி க்கு தன் அண்ணன் அரசனாக இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் காட்டிற்கு அரசனாக விரும்பினார். அதற்காக பல சதி திட்டங்களை தீட்டினான்.
சரபிக்கு தனக்கு ஆண்பிள்ளை பிறந்ததற்கு மிகவும் சந்தோஷம் தனக்குப் பிறகு இந்த காட்டை ஆள ஒருவன் இருக்கிறான் என்ற மகிழ்ச்சியும் சரபிக்கு இருந்தது. பைரவி சிம்பாவே நினைத்து மிகவும் பெருமை கொண்டது. சிம்புவிற்கு ஓடி ஆடி விளையாடும் வயது வந்துவிட்டது. அப்போது இந்த காட்டை சுத்தி காட்டும்படி சரபியிடம் கேட்டது. அதற்கு விடிந்ததும் காட்டை நான் உனக்கு சுற்றி காட்டுகிறேன் என்றது சரபி. சிம்புவும் சரி என்று சொல்லிவிட்டு உறங்கச் சென்றது.
சிம்பா விடிந்ததும் எழுந்து தந்தையிடம் காட்டை சுற்றி காட்டுங்கள் என்று கேட்டது. அதற்கு சரபி வாச்செல்லலாம் என்று கூறி முழு காட்டையும் சிம்பாவிடம் காண்பித்தது. வெளிச்சத்தில் இருக்கும் அனைத்து காடுகளும் விலங்குகளும் நமக்கு சொந்தமானவை என்று கூறிவிட்டு அந்த இருட்டான இடத்திற்கு மட்டும் நீ கட்டாயம் செல்லக்கூடாது என்று சிம்பாவிடம் சரபி கூறியது. சிம்பா என் செல்லக் கூடாது முழு காடும் நம்முடையது தானே பிறகு அந்த இருட்டுக்குள் மட்டும் ஏன் செல்லக்கூடாது என்ற கேள்வியை எழுப்பியது. அதற்கு சரபி கூறியதை மட்டும் கேளு எதிர்த்துப் பேசாதே என்று கோபத்துடன் கூறியது.
எதர்ச்சியாக சிம்பா சித்தப்பாவை பார்த்தது. சிம்பா இந்த காட்டிற்கு என் தந்தை பிறகு நான்தான் ராஜா இங்கு எல்லா வேலைகளும் நான் தான் கொடுப்பேன் உங்களுக்கும் வேலை கொடுப்பேன் என்று சித்தப்பாவிடம் கூறியது. அதற்கு ராக்கி ஆம் நீதான் ராஜா நீ சொல்வதை தான் எல்லோரும் கேட்பார்கள் என்றது. அந்த இருட்டுக்குள் யார் சொல்கிறார்களோ அவர்கள்தான் ராஜாவாக ஆகமுடியும் என்று சிம்புவிடம் ராக்கி கூறியது. அதைக்கேட்ட சிம்பா இருட்டுக்குள் சென்றது. அங்கு பூனைகள் இருந்தன. ஓநாய்கள் சிம்பாவே கடிக்க வந்தன அப்போது சரபி வந்து பூனைகளை விரட்டி விட்டு சிம்பாவே காப்பாற்றியது. தற்செயலாக சரபி ஓநாய்கள் பிடியில் சிக்கி இறந்து விட்டது.
பிறகு சிம்பா தன் தந்தையை தானே கொன்று விட்டோமோ என்ற வருத்தத்துடன் காட்டை விட்டு சென்றது. ராக்கி காட்டின் ராஜாவாக மாறியது பிறகு காடே நாசம் படுத்தியது. சிம்பாவின் தாயையும் கொடுமை செய்தது. சிம்பா வேறொரு இடத்திற்குச் சென்று அங்கேயே சிலகாலம் வாழ்ந்தது இக்கொடுமையை அறிந்த சிம்பா திரும்பவும் சிம்பாவின் காட்டிற்கு வந்தது. அங்கிருந்த ராக்கியை அடித்து விரட்டிவிட்டு தன் தந்தை சரபி போல் ஆட்சி புரிந்தது. பிறகு அக்காட்டில் இருக்கும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் சந்தோஷம் அடைந்தனர். சிம்பாவின் அம்மாவும் சந்தோஷம் அடைந்தாள்.