ஒரு தேவனும் ஒரு அரகனும் ஆன்மாவைப் பற்றி அறிவதற்காக ஒரு முனிவரிடம் சென்றனர். பல வருடங்கள் கல்வி கற்றனர். இறுதியில் ஒரு நாள் அந்த முனிவர் நீங்கள் தேடும் பொருள் நீங்களே என்று கூறினார்.
தங்கள் உடலை ஆன்மா என்று இருவரும் நினைத்து கொண்டனர். மிகுந்த திருப்தியுடன் திரும்பச் சென்று நாங்கள் கற்றத்தாரிடம், கற்க வேண்டிய அனைத்தையும் நாங்கள் கற்று விட்டோம். இனி உண்போம் குடித்து கழிப்போம் நாங்கள்தான் ஆன்மா எங்களை தவிர இந்த பூமியில் பெரிய சக்தி ஒன்றுமில்லை என்று எண்ணினார்கள்.
அரக்கனின் இயல்பே அறிவீனம் மூடத்தனமும் தான். அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை தானே கடவுள் தானே ராஜா என்று எண்ணினார். ஆண்மை என்பது உடலே என்ற பூரண திருப்தி அடைந்துவிட்டான். தேவன் சற்று தூய இயல்பு படைத்தவனாக இருந்தான். அவன் முதலில் நானே அதாவது இந்த உடலே கடவுள். எனவே அதுவே வலிமையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணினான். எல்லாவித இன்பங்களையும் அளிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக முடிவு செய்தான்.
ஆனால் முதியவர் கூறிய பொருள் அதுவாக இருக்காது. அதற்கு மேல் ஏதோ இருக்கிறது என்று சில நாட்களிலேயே புரிந்துகொண்டான். எனவே அவன் முனிவரிடம் திரும்ப சென்று இந்த உடலை தான் கூறினீர்களா? என்று வினாவினான். ஆனால் எல்லா உடல்களும் அழிந்து போவது மரணம் ஆயிற்று அல்லவா? என்று கேட்டான்.
அதற்கு அந்த முனிவர் நீயே கண்டுபிடி. நீயே அது என்று கூறினார். அந்த தேவனும் உடலை இயக்குகின்ற பிராம சக்தியே ஆன்மா என்பது தான் முனிவர் கூறியதற்கு பொருளாக இருக்கும் என்று எண்ணினார். ஆனால் எல்லாப் எங்களைத்தான் ஆன்மா என்று கூறினீர்களே? ஆனால் எல்லா உடல்களும் அழிந்து போவதை நான் காண்கின்றேனே! ஆன்மா மரணமற்றது அல்லவா! என்று கேட்டான்.
அவர் மறுபடியும் கண்டுபிடி நீயே! அதை என்று கூறினார். வீடு திரும்பிய தேவன் யோசிக்க ஆரம்பித்தான். ஆன்மா என்பது ஒரு வேலை மணமாக இருக்கலாம் என்று நினைத்து பார்த்தான். மனதில் இருக்கும் எண்ணங்கள் என்பது நல்லதாகவும் இருக்கலாம் தீய எண்ணத்துடனும் இருக்கலாம் என்பதை உடனே அறிந்து கொண்டான். ஆனால் அவன் எண்ணம் முழுவதும் ஆன்மா என்பதன் பொருள் என்னவாக இருக்கும் என்பதில் மட்டும்தான் இருந்தது.
மாறுகின்ற மனம் ஆன்மாவாக இருக்க முடியாது என்று கருதி அவன் முனிவரிடம் சென்று சுவாமி மனம் ஆன்மாவாக இருக்க முடியாது நீங்கள் அதை சொன்னீர்களா என்று முனிவரிடம் கேட்டான். அவரோ மறுபடியும் நீயே கண்டுபிடி என்று கூறி விட்டார்.
தேவன் வீடு சென்றான். இறுதியில் தானே ஆண்மா என உணர்ந்து கொண்டான். ஆன்மா எண்ணங்கள் அனைத்திற்கும் அப்பால் உள்ளது, ஒன்றிய ஆனது, பிறப்பு இறப்பு இல்லாதது, அதனை ஆயுதங்கள் வெட்ட முடியாது, தீ எரிக்க முடியாது, நீர் அணைக்க முடியாது, எல்லாம் அறிந்ததே எல்லாம் உள்ளது. அவை உடலும் அல்ல மனமும் அல்ல இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது.
இவ்வாறு அறிந்த தேவன் திருப்தி அடைந்தார். உடலை நேசித்ததால் பாவம், அந்த அசுரன் அந்த உண்மையை அறியவில்லை.