
நாம் உயர்வதற்கு ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளை செய்வதாகும். இப்படிச் செய்வதன் மூலம் வலிமையைப் பெருக்கிக்கொண்டு சென்று இறுதியில் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம்.
ஒரு இளம் துறவி காட்டிற்குச் சென்றார். அங்கு தியானம் வழிபாடு உடற்பயிற்சி ஆகியவற்றில் ஆர்வத்துடன் பங்கு கொண்டிருந்தார். அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் மீது சில சிறகுகள் விழுந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். ஒரு காகமும் குருவியும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவருக்கு வந்தது கோபம். திமிர் இருந்தால் என் மீது சிறகு போட்டு இருவரும் சண்டையிட்டுக் கொண்டு இருப்பீர்கள் என்று கேட்டார்.
யோகி அல்லவா! அவர் தலையில் இருந்து ஒரு நெருப்பு மேலெழுந்து அந்த பறவைகளை சாம்பலாக்கி விட்டது. அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. தன்னிடம் இருக்கும் சக்தியை பார்த்து அவரை பெருமை கொண்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி உணவிற்காக அருகிலுள்ள ஊருக்கு சென்றார். அங்கிருக்கும் ஒரு வீட்டில் அம்மா பிச்சை இடுங்கள் என்று கேட்டார்.
மகனே இரு என்று வீட்டில் இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி பேதைப் பெண்ணே என்னை காக்க வைக்க தைரியம் உனக்கு எப்படி இருக்கு. எனக்குள் இருக்கும் சக்தி உனக்கு தெரியவில்லை என்று நினைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளிருந்த குரல் மகனே உன்னை பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக் கொள்ளாதே. இங்கிருப்பது காக்கையும் அல்ல குருவியும் அல்ல என்று குரல் வந்தது. துறவி திகைத்து விட்டார். எப்படி இருந்தாலும் காத்திருக்க வேண்டியிருந்தது.
அதற்கு உள்ளிருந்து அவள் மகனே உன்னை போல் தவமும் துறமும் எனக்கு தெரியாது. அன்றாடம் கடமைகளைச் செய்து கொண்டிருக்க சாதாரண பெண் நான். என் கணவர் நோயற்று இருக்கிறார். அவருக்கு நான் பணிவிடை செய்கிறேன். அதனால்தான் உன்னை காக்க வேண்டியதாயிற்று. கடமைகளை வாழ்நாள் முழுதும் மனப்பூர்வமாக செய்து வருகிறேன். திருமணத்திற்கு முன் எனது பெற்றோர்களுக்கு கடமைகளை செய்து இப்போது என் கணவனுக்கு செய்து வருகிறேன். கடமைகளை செய்து வந்தாலே என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதனால் தான் உன்னை நிலங்களையும் தெரிந்துகொள்ள முடியும். காட்டில் நடத்தையும் தெரிந்து கொண்டேன். அதற்கு மேலும் ஏதேனும் அறிந்துகொள்ள விரும்பினால் நீ சந்தைக்கு செல் அங்குள்ள வியாதனை சந்தி. அனைத்தையும் எடுத்துரைப்பார்.
முதலில் அந்த துறவி வியதனிடம் செல்வதா என்று நினைத்தார். சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியில் அவரது தலைகணம் சரிந்துவிட்டது. நகரத்துக்குச் சென்றார். அங்கிருந்த சந்தையை தேடி கண்டுபிடித்து அவனை சந்தித்தார். அங்கே கொளுத்த பருமனான ஒருவன் பெரிய கத்தியால் இறைச்சியை வெட்டி படி விலை பேசுவது விற்பதும் ஆக இருந்தான். அடக்கடவுளே இந்த மனிதனிடமிருந்து நான் உயர்வதை கேட்கப் போகிறேன் என்று நினைத்தார். அவனைப் பார்த்தால் அசுரனை போல் தெரிகிறது என்று நினைத்தார்.
இதற்கிடையில் வியாதன் துறவியை கண்டுவிட்டு அந்த பெண்மணி அனுப்பி வைத்தாரா இதோ வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என்றார். என்ன நடக்கிறது என்று அறியாமலே அமர்ந்திருந்தார் துறவி. நெடு நேரம் ஆனதும் வேலை முடிந்தது. வியாதன் பணத்தை எடுத்துக்கொண்டு வாங்க வீட்டுக்கு போகலாம் என்று அழைத்து சென்றார். வீட்டிற்கு போனதும் துறவியிடம் இங்கே அமர்ந்திருங்கள் இதோ வருகிறேன் என்று சென்றார். பின்னர் வீட்டிற்கு சென்று வயது முதிர்ந்த தன் தந்தையும் தாயும் குளிப்பாட்டி அவர்களுக்கு சோறுண்டு அவர்கள் மனம் மகிழும்படி நடந்தான். பிறகு துறவியிடம் வந்தான். துறவி அவனிடம் கடவுளைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றிய சில கேள்விகளைக் கேட்டான். அதற்கு அவன் மகாபாரதத்தில் இருந்து தனது கருத்துக்களை உரைத்தான்.
இதைக்கேட்ட துறவி நெகிழ்ச்சியூட்டும் போனான். யாரையும் உருவத்தைக் கண்டு எடை போடக்கூடாது என்று புரிந்துகொண்டான்.