ஒருஅடர்ந்த காட்டில் கர்வம் பிடித்த நரிஒன்று வாழ்ந்து வந்தது. அந்த நரிஒரு நாள் காலையில், உணவைதேடி வேட்டைக்கு மேற்கு நோக்கி கிளம்பியது. அப்போது கிழக்கே இருந்து எழுந்தசூரிய ஒளியால் நரியின் நிழல்மிக பெரியதாக தெரிந்தது.
தனதுநிழலை பார்த்த நரிக்கு ஒரேசந்தோசம். "நான் ரொம்பப் பெரியஆள். அதுவும் இந்த காட்டின்ராஜாவாக உள்ள சிங்கத்தை விடவும்பெரியவனாக நான் உள்ளேன் நினைத்துகொண்டேவேட்டைக்குச் சென்றது.
செல்லும்வழியில் நரி ஒரு சிங்கத்தைகண்டது. சிங்கமோ சற்று முன்னர்தான் ஒரு மானை வேட்டையாடிஅதை உண்ட களைப்பில் மெதுவாகநடந்து வந்துகொண்டிருந்தது.
நரியும்தன்னுடைய நிழல் சிங்கத்தைவிடவும் பெரியதாகஇருப்பதாக நினைத்துகொண்டு சிங்கம் வரும் வழியில்நடந்து சென்றது. சிங்கமும் உண்ட களைப்பில் இருந்ததால்நரியை ஒன்றும் செய்யாமல் கடந்துசென்றது.
நரிக்கோஒரே குஷி, நாம் சிங்கத்தைவிடவும் பெரியதாக இருப்பதனால் சிங்கம் என்னைகண்டு பயந்துசென்றது என நினைத்துகொண்டு அன்றுமாலை தன்னுடைய வீட்டிற்க்கு சென்றது.
மாலைவீட்டிற்குச் சென்றதும் நரி காட்டில் உள்ளமிருகங்களை எல்லாம் அழைத்தது. அனைத்துமிருகங்களும் நரியின் கூட்டத்திற்கு வருகைபுரிந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும், "இனிமேல் இந்த காட்டிற்கு நான்தான் ராஜா என்றது.
யானையோ, "இதை நாங்கள் ஏற்க முடியாதுஎன்றது உடனே நரி காலையில்நடந்த சம்பவத்தைக் கூறி சிங்கமே என்னைப்பார்த்து பயந்து சென்றது" என்றது. கூட்டத்தில் இருந்த மானோ, "சிங்கத்தைஉன் முன் மண்டியிடச் சொல்பிறகு உன்னை இந்த காட்டிற்குராஜவாக்குகிறோம் என்றது.
அடுத்தநாள் நரி அந்த சிங்கத்தைதேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடையபாதையை நோக்கி வருவதை கண்டுநரி கர்வத்துடன் நின்றது.
சிங்கம்வந்தவுடன் சிங்கத்தை பார்த்து, நரி "என் முன்னாள் மண்டியிட்டுச்செல்" என்று கூறியது.
சிங்கமோமிகவும் கோவத்துடன், தரக்குறைவாக பேசிய நரியை பார்த்து"உன்னை மன்னித்து விடுகிறேன் உடனே இங்கிருந்து ஓடிவிடு" என்றது.
நரியோசிங்கம் தன்னை கண்டு பயந்துவிட்டது என நினைத்து "முடியாது” என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடையநிழலைப் பார்த்தது. அது மதிய நேரம்என்பதால் நரியின் நிழல் உண்மையானஅளவில் இருந்தது. அப்பொழுது தான் நரிக்கு புரிந்ததுசூரிய ஒளியில் தன்னுடைய நிழல்பெரியதாக இருந்தது என்று.
இதைபொறுத்துக்கொள்ள முடியாத சிங்கம் நரியைஒரே அடியினால் கொன்று தின்றது.