முட்டாள்பூனை ஒன்று ஒரு வீட்டில்இருந்து பெரிய கருவாட்டு துண்டைதிருடியது. அதனை வாயில் பத்திரமாககவ்விக்கொண்டு தன் வீட்டிற்கு புறப்பட்டது.
செல்லும்வழியில் சில பூனைக்குட்டிகள் அந்தமுட்டாள் பூனையிடம், "கருவாட்டுதுண்டை தருமாறு கேட்டன. ஆனால்அந்த முட்டாள் பூனையோ இதை நான்யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான்மட்டுமே சாப்பிட போகிறேன் என்றுகூறிவிட்டுச் சென்றது.
செல்லும்வழியில் அந்த முட்டாள் பூனைஒரு பாலத்தை கடக்க வேண்டியிருந்தது. பூனை பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப்பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன்உருவம் தெரிந்தது.
தண்ணீரில்தெரிந்த அதன் உருவத்தின் வாயிலும்கருவாட்டு துண்டு இருந்தது.
அதைக்கண்ட பூனை "இந்த பூனையிடம் ஒருபெரிய கருவாட்டு துண்டு உள்ளது. இதையும்அபகரித்துவிட வேண்டும் என்று நினைத்தது.
உடனேஅது பலமாக "மியாவ்" எனக் கத்திக் கொண்டேதண்ணீரில் தெரிந்த பூனையின் மீதுபாய்ந்தது. அதனால் அதன் வாயில்இருந்த கருவாட்டுதுண்டும்
தண்ணீரில்விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள்பூனைக்கு புரிந்தது இது நிழல் பிம்பம்என்று.
பெரியகருவாட்டு துண்டை தேடிச் சென்றபூனை தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரைக்காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேறியதுஅந்த முட்டாள் பூனை.
என்னகுட்டீஸ், இந்த கதையில் வரும்முட்டாள் பூனையின் கதாபாத்திரம் நமக்கு விளக்குவது என்னவென்றால்எந்தவொரு விசயத்திலும் நாம் பேராசை கொண்டால், பெரு நஷ்டம் உண்டாகும் என்பதுதான்.