
அது ஒரு கோடை காலம். அந்த காட்டில் விலங்குகள் அனைத்தும் அந்த காட்டை விட்டு வேறு ச சென்று விட்டன.
இதனால் காட்டில் உள்ள மற்ற விலங்களுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டது. அந்த காட்டில் வாழ்ந்த சிங்கமும் புலியும் ஒரு ஒப்பந்தம் செய்தன.
சிங்கம் புலியிடம் "நாம் இருவரும் ஒன்றாக வேட்டையாடி இரையை சமமாக பிரித்துக் கொள்வோமா?" என்றது. புலியும் சம்மதம் தெரிவித்தது.
ஒருநாள் சிங்கமும் புலியும் வேட்டைக்குச் செல்லும்போது வழி தவறிய கால் உடைந்த மான் குட்டி ஒன்று வழியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தன. சிங்கத்திற்கும் புலிக்கும் அளவற்ற மகிழ்ச்சி. ஏனெனில் சிங்கமும் புலியும் உணவு சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது.
சிங்கமோ அந்த மானின் வயிற்றுப்பகுதி எனக்கு தான் என்றுது, புலியோ "இல்லை இல்லை அதன் வயிற்றுப்பகுதி எனக்குத் தான்" என்றது.
மானைப் பயங்கரமாகச் பங்கு சண்டை போடுவதில் சிங்கமும் புலியும் சண்டை செய்தன. வெகுநேரம் செய்ததால் இரண்டும் களைப்படைந்து விட்டன.
அதனால் இரண்டும் தரையில் சாய்ந்தன. அந்த சமயம் வெகுதூரத்திலிருந்தே இவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு குள்ள நரி ஓடி வந்தது.
அங்கிருந்த மானைத் தூக்கிகொண்டு ஓடிவிட்டது சிங்கமும் புலியும் ஒன்றும். செய்ய முடியாமல் அதனைப் பார்த்தபடி கீழே தரையில் கிடந்தன.
இவை இரண்டும் வேட்டையில் கிடைத்ததை நல்ல முறையில் பங்கு போட்டுக் கொள்ளாமல் வீணாகச் சண்டை போட்டு இரையை இழந்தோமே என்று வருத்தப்பட்டன.