உருவம் கண்டு யாரையும் எடை போடாதே | தமிழ் சிறுகதைகள் (Siruvar Kathaigal)

 

உருவம் கண்டு யாரையும் எடை போடாதே | தமிழ் சிறுகதைகள் (Siruvar Kathaigal)


ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று குகைக்குள் தூங்கிக் கொண்டு இருந்தது. அங்கு வந்த சுண்டெலி சிங்கத்தின் மீது ஏறி குதித்து விளையாடியது. 

இதனால் சிங்கம் விழித்தெழுந்தது கோபம் கொண்ட சிங்கம் சுண்டெலியைப் பிடித்து, "நீ எனக்கு இன்று நல்ல மதிய உணவாக போகிறாய்" என்று கர்ஜித்தது. 

ஆனால் சுண்டெலியோ! சிங்கத்திடம், என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டேன். என்னை சாப்பிடாதீர்கள்" எனக் கெஞ்சிக் கேட்டது. 

சிங்கத்திடம் "இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன்" என்றது. சிங்கமோ, "இவ்வளவு சிறிய உடம்பை வைத்துக்கொண்டு எனக்கு நீ உதவ போகிறாயா என்று சுண்டெலியை ஏளனம் செய்தது இருந்தாலும் சுண்டெலியைக் கொல்லாமல் போக விட்டது. 

 சில நாட்கள் சென்றது. ஒரு நாள் சிறிய இறைச்சி துண்டிற்கு ஆசைப்பட்ட அந்தச் சிங்கம் வேட்டைக்காரர்கள் வைத்திருந்த வலையில் சிக்கிக்கொண்டது. 

வலையில் மாட்டிக் கொண்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது. 

அந்தச் சிறிய சுண்டெலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது. 

சிங்கம் இந்தச் சின்ன சுண்டெலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு தன்னைக் காப்பாற்றிய சுண்டெலிக்கு நன்றி சொல்லி சென்றது. 

என்ன குட்டீஸ் இந்த கதையில் மூலம், உருவத்தை வைத்து யாரையும் எடை போடக் கூடாது என தெரிந்து கொண்டீர்களா!!

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

Learn More