அது ஒரு அழகிய குளிர்க்காலம். ஒரு நாள் நாகம் ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது.
அந்த நேரத்தில் அவ்வழியே வந்த அரசன் அந்த நாகத்தைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த அரசன் அந்த நாகத்திற்கு உதவிட நினைத்தான்.
நாகத்தை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான், அரசனின் உடல் சூடு பட்டதும், நாகம் மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.
அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய அரசனைக் பலமாகக் கடித்துவிட்டது. நாகத்தின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த அரசன் தன் செய்கைக்காக வருந்தினான்.
நாகத்தைப் பார்த்து "ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்று கூறிவிட்டு இறந்தான்.