ஒரு வயதான மனிதர் தனிமையாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் நன்றாக மண்வெட்டி ஒரு உருளை கிழங்கு தோட்டம் பயிரிட விரும்பினார். அது அவரால் செய்யமுடியாத அளவிற்கு மிகவும் அதிக வேளையாயிருந்தது. அவருக்கென்று உதவியாக இருந்த அவரது ஒரே மகன் சிறைச்சாலையிலிருந்தான்.
அந்த வயதான மனிதர் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்:
அன்புள்ள மகனுக்கு,
நான் இந்த வருடம் உருளை கிழங்கு தோட்டம் நட முடியாமல் போனது. எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் இந்த வருடம் தோட்டம் பயிரிடாதிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் உனது அம்மாவிற்கு தோட்டம் பயிரிடுதால் மிகவும் பிரியமாயிருந்தது. எனக்கு மிகவும் வயதான காரணத்தினால் தோட்டத்தை பயிரிட உழவு வேலை செய்யமுடியவில்லை. நீ இங்கு இருந்திருந்தால் என்னுடைய எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திருக்கும். எனக்கு தெரியும் நீ சிறையிலில்லாமலிருந்தால் எனக்காக தோட்டத்தை உழவு செய்து கொடுத்திருப்பாய்.
அன்புடன்,
அப்பா.
சிறிது நாட்களில் அந்த வயதான மனிதருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. “கடவுளே, நல்ல வேலையாக நீங்கள் தோட்டத்தை உழவு செய்யவில்லை, ஏனென்றால் அங்கு தான் எல்லா துப்பாக்கிகளையும் நான் புதைத்து வைத்துள்ளேன்”.
அடுத்த நாள் விடிகாலை 4 மணிக்கு ஒரு டஜன் காவலர்கள் வீட்டிற்கு வந்தார்கள். பின்னர் அந்த தோட்டத்தில் துப்பாக்கிகளை தேடுவதற்காக எல்லா இடங்களிலும் தோண்டி பார்த்தனர். ஆனால் எந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குழப்பத்திலிருந்த அந்த மனிதர் அடுத்த நாளன்று அவரது மகனிற்கு இன்னொரு கடிதம் எழுதி என்ன நடந்ததென்று விளக்கிவிட்டு அடுத்து என்ன செய்வதென்று கேட்டு எழுதினார்.
அவரது மகன் அடுத்த கடிதத்தில் சொன்னது : “நீங்கள் சென்று உருளைகிழங்கு தோட்டத்தை அங்கே பயிருடுங்கள் அப்பா, இதுதான் நான் இங்கே இருந்து கொண்டு உங்களுக்கு செய்ய முடிந்த பெரிய உபகாரம்”.
நீதி : நீங்கள் உலகில் எங்கே இருக்கிறீர்கள் என்பது பெரிதல்ல, ஒன்று செய்ய வேண்டுமென்று உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் நீங்கள் முடிவு செய்து கொண்டால் உங்களால் அதனை செய்ய முடியும். எண்ணங்கள் தான் மிகவும் முக்கியம், நாம் எங்கு இருக்கிறோமோ அல்லது அந்த மனிதர் எங்கு இருக்கின்றார்களோ அது அல்ல.